ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 9 ஜனவரி, 2023

காலத்தின் புரிதல்


இங்கே நான் வகுத்து வைத்த 

எந்த விதியிலும்

நீ பொருந்தவில்லையே

என்று

என்னை இழுத்துச் சென்ற

காலம் களைத்து போய்

சொன்னது...

அதைத் தான் நான்

உன்னிடம் பலமுறை

சொல்ல முயற்சி செய்தேன்

நான் பேசும் போதெல்லாம்

உஸ்.. பேசாமல் வா

என்று அதட்டி உருட்டி

இழுத்து வந்து விட்டு

இப்போது என்மீதே

பழி போடுகிறாய்...

நான் என்ன செய்ய இயலும் என்று

நான் காலம் இழுத்து வந்த

களைப்பில் முனகுகிறேன்...

#வாழ்வியல்கவிதை

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மர்ம வீடு பாகம் (1)

அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...