ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 28 ஜூலை, 2022

சமுத்திரத்தில் உதித்தவள்..

 


ஆழ்கடலில் பேரமைதியை

புதைத்து வைத்திருக்கும்

 சமுத்திரத்தில்

நான் உதித்தேன்...

இந்த பிரபஞ்சத்தின் சலசலப்பு

எனது ஆழ்ந்த அமைதியை

 அசைத்து விடவா

முடியும்?

இங்கே எனக்கான சலசலப்பெனும்

தீயில் குளிர் காய 

ஒரு கூட்டம் காத்திருந்து

ஏமாற்றத்தை பரிசாக பெற்று

செல்கிறது...

நான் அந்த இறைவியின் அம்சமென

இங்கே எவருக்கும்

சொல்லி விடாதீர்கள்...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த பிரபஞ்சத்தின் பிறழாத சுழலில் எங்கோவொரு புள்ளியாக நான்...

இந்த பிரபஞ்சத்தின்  வரைமுறைகள் எது  என்று  சரியாக புலப்படவில்லை எனக்கு... ஏதோவொரு விதியின்  வரைமுறையில் தான்  இந்த பிரபஞ்சத்தின்  பிறழாத சுழ...