இயற்கையின் மீதான
பெரும் காதலோடு கூடிய
பித்து நிலையில் நான்
லயித்து கிடப்பதில்
அங்கே என்னோடு பேசுவதில் இருந்து
பலபேர் தள்ளி இருக்கிறார்கள்...
நானும் இயற்கையும் அது பற்றிய
கவலை இல்லாமல்
பெரும் காதலோடு
பின்னி பிணைந்து கிடக்கிறோம்...
ஏன் இந்த பித்து நிலை
உங்கள் இருவருக்கும் என்று
முணுமுணுப்பவர்களுக்கு
தெரியாது......
அது என்னிடம் எவ்வளவோ பொக்கிஷத்தை
அள்ளி அள்ளி கொடுத்து விட்டு
அது பற்றி எங்கேயும்
மனிதர்கள் போல தம்பட்டம் அடித்து விடுவதில்லை...
அதனால் தான்
ஒருவர் மீது ஒருவருக்கு
பெரும் பித்து நிலை
எங்கள் இருவருக்கும் என்றேன்...
சரிதான் அங்கே மக்கள்
பேசிக் கொள்வது
உண்மை தான் போலும்
பெரும் கிறுக்கு பிடித்து விட்டது
இந்த பெண்ணிற்கு என்று
மீண்டும் முணுமுணுத்து
செல்கிறார்கள்...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:05/07/26.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக