வாழ்வின் பெரும் அமிழ்தத்தை
இந்த இயற்கை பருகுவதற்காக
அங்கே போவோர் வருவோரிடம்
கெஞ்சி கூவி கூவி
அழைக்கிறது...
அதன் அற்புதத்தை உணராத
மக்களோ அதை கொஞ்சம் கூட
திரும்பி பார்க்காமல்
அதற்கு சரியான பித்தர் என்ற பட்டத்தை
அதற்கு கொடுத்து விட்டு
திட்டி தீர்த்து விட்டு
வேகமாக நகர்கிறார்கள்...
அதை பேரமைதியோடு
கவனித்து விட்டு அதன் அருகில் சென்று
அந்த அமிழ்தத்தை
வாங்கி பருகி ...
நிலைத்த பேரானந்தத்தில்
அங்கும் இங்கும் அலைவதை
பார்த்து விட்டு
அதே மக்கள் எனக்கும்
இவரும் அந்த இயற்கையோடு சேர்ந்த
பெரும் பித்தர் என்று
நான் கேளாமலேயே பட்டத்தை
சூட்டி விட்டு வேகமாக
அங்கிருந்து நகர்கிறார்கள்...
நானும் இயற்கையும்
அவர்கள் கொடுத்த பட்டத்தை
மிகவும் பத்திரமாக
வைத்துக் கொண்டு
அவர்கள் நிலையை பேசி
வாய் விட்டு கலகலவென்று
சிரிக்க ....
அங்கே அந்த பிரபஞ்சம் மட்டும்
எங்களை மௌனமாக
சிறுமுறுவலோடு
ரசித்து மகிழ்ந்தது...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:05/07/26.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக