ஒரு மெல்லிய
திரித்து விட்ட
வெள்ளி கயிறை போல
நீ கவர்ந்து இழுக்கிறாய்...
அங்கே சூரிய கிரணத்தின்
வெப்பத்தால்
உன் ஒளி சிதறல்கள்
சிதறிடிக்கப்பட்டு
வண்ணமயமாக...
பல வண்ணங்களில் பூக்களை
நொடி தோறும் உருவாக்கி...
இந்த பிரபஞ்சத்திற்கு
எந்தவித எதிர்பார்ப்பும்
இல்லாமல்
பரிசளித்துக் கொண்டே
இருக்கிறாய்...
அந்த அழகில்
நான் இங்கே அசையாமல்
மயங்கி கிடப்பதை
இந்த மொத்த பிரபஞ்சமும்
வேடிக்கை
பார்த்து லயிக்கிறது...
அங்கே எந்தவித ரசனையும்
இல்லாமல்
ஓடிக் கொண்டே இருக்கும்
மனிதர்களே
கொஞ்சம் உங்கள் ஓட்டத்தை
நிறுத்தி விட்டு
இந்த அழகியலை
இந்த அதி அற்புதமான
பொக்கிஷத்தை
ரசிக்காமல்
அங்கே எந்த பொக்கிஷத்தை
தேடி நிற்காமல்
ஓடிக் கொண்டே
இருக்கிறீர்கள்...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:08/07/26.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக