ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 18 ஜூலை, 2026

விசுவாசம்...


ஒரு பறவையின் 

தாகத்தை தீர்க்க 

அந்த மனிதர்கள் 

கழிவு நீரை 

கொஞ்சம் கூட 

இரக்கமே இல்லாமல் 

பரிசளித்து விட்டு 


நவீன நாகரீகத்தின் 

படிமங்களில் 

புதைந்து கொள்கிறார்கள் 

கொஞ்சமும் கருணை 

இல்லாமல்...


இங்கே இயற்கையும் 

மௌன சாட்சியாக 

அவர்கள் ஜீவ காருண்யத்தின்

அளவை மதிப்பிட்டு 

பரிசொன்று கொடுப்பதற்காக 


நெடு நேரம் காத்திருப்பதை 

உணர்ந்து 

சிறிது அலட்சியமாக 

திரும்பி பார்க்கும் போது 

அங்கே இயற்கை 

இத்தனை நாள் நாம் தந்த 

பெரும் பரிசிற்கு 

நிகராக இல்லை என்றாலும் 

சிறியதாக 

நிலநடுக்கம் எனும் 

புதைமண்ணில் நேசத்தோடு 

புதைத்துக் கொண்டது 


அதுவும் தாய் தானே 

அந்த அரவணைப்பின் 

கிடுக்கி பிடியில் 

உணர்ந்து கொண்ட தருணத்தில் 

அவர்கள் உயிர் அங்கே 

அதன் கைகளிலேயே 

பிரிந்ததில்... 


அந்த பறவை அங்கே 

அவர்களுக்காக

அந்த இடிப்பாடுகளின் 

நடுவில் துக்கம் 

அனுசரிக்கும் 

கருணையில் தான் 

இந்த பிரபஞ்சம் 

தனது அச்சில் பிறழாமல் 

சுற்றிக் கொண்டு இருக்கிறது

என்று சூட்சமமாக 

உணர்ந்து ...

இந்த பிரபஞ்சம் 

பெரு மூச்சொன்று

உதிர்க்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:19/07/26.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்வெனும் நெடும் பாதையில் நான்...

  வாழ்வெனும்  நெடும் பாதையில்  வஞ்சிக்கப்பட்ட  பலரோடும்... உண்மையான  நேசத்தை கொட்டி  எதையும்  என்னிடம் எதிர்பாராமல்  பயணிக்கும்  பலரோடும்  த...