தினம் தினம்
ஒரே மாதிரியான காரியம்
ஒரு வேள்வியை போல
தோய்வின்றி நடத்துகிறேன்...
அங்கே ஆகூதியில்
தினமும்
என் ஆசைகளை பலியிட்டு
இதோடு என்னை
நிர்மலமான மனிதராக
மாற்றி விடும் என்று
மிகுந்த ஆவலோடு...
அந்த தருணத்தை
தரிசிக்க காத்திருந்து
ஏமாந்து போன நாட்கள்
இங்கே எத்தனை என்றால்
இதோ கடந்து செல்ல...
என்னிடம் இருந்து
விடை பெற காத்திருக்கும்
இந்த நாள் வரை தான்...
அந்த வேள்வி தீ
அணையாமல்
கனகனவென்று
பெரும் வெப்பத்தால்
என் மனமெங்கும் பரவி
என்னை தகிக்க
வைத்து நோகடிக்கிறது...
நான் அந்த வேள்வி
நடத்துவதை நிறுத்தி விட
எத்தனிக்கும் போதெல்லாம்
என் மனம் என்னோடு
கோபித்துக் கொண்டு
பெரும் ஆக்ரோஷத்துடன்
சண்டைக்கு தயாராகி விடுகிறது...
நானோ அதன் ஆக்ரோஷத்திற்கு
அஞ்சியே அந்த வேள்வியை
நடத்தி வருகிறேன்...
போதுமடா சாமி இந்த
மானிட ஜென்மம் என்று...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:05/07/26.

aathangam niraintha varigal aakroshamaana velipaadaai vanthullana. thodarnthu ezhuthungal, vazhthukkal.
பதிலளிநீக்குநிச்சயமாக... தங்களது மேலான ஆதரவை தொடர்ந்து தந்துக் கொண்டு இருக்கிறீர்கள்... பேரன்பும் நன்றிகளும் 🙏💫🎉
நீக்கு