ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 31 ஆகஸ்ட், 2023

கடிதத்தில் மேலும் பிணைக்கப்பட்ட நட்பு..

 


யாரோ யாருக்கோ எழுதிய கடிதங்கள் கையில் கிடைத்து வாசிக்கும் போது உணர்வுப்பூர்வமாக மற்றும் சுவாரஸ்யமான வாசிப்பாக இருக்கிறது... கடிதங்களில் உள்ள வார்த்தைகள் அளவிட முடியாத ஆற்றுப்படுத்துதலை தந்து இருக்கிறது... கடிதங்கள் எழுதி விட்டு அது கிடைத்து விட்டதாக ஒரு கடிதம் நமக்கு வந்து சேர்ந்து சில பல நலம் விசாரிப்புகள் மற்றும் அங்கே நடந்த நிகழ்வுகளை கடிதத்ததின் வழியே வாசிக்கும் போது காட்சி படம் விரிகிறது நம்மிடையே.. சில நேரங்களில் நமக்கு வந்து சேர்ந்த கடிதங்களை எத்தனை முறை வாசித்து இருப்போம் என்று நமக்கே கணக்கு தெரியாது..

கடிதங்கள் நமக்கு ஆயிரம் ஆயிரம் உறவுகளை நிலைத்து இருக்க வைத்து இருக்கிறது.. அந்த வகையில் எனது கல்லூரி காலத்தில் எனது சகோதரி சத்திய பாமா எழுதிய கடிதங்கள் இன்னும் என்னிடம் இருக்கிறது.. அவர் சென்னையில் வசித்து என்னோடு ஒரே கல்லூரியில் பயின்றவர்.. அவர் என்னை விட மூத்தவர்.. அவர் எம் சி ஏ மாணவி.. நானும் அவரும் தோழிகள்.. எங்கள் நட்பு மிகவும் பலமாக நெடுங்காலம் இருந்தது.. இன்றும் இருக்கிறது...

ஆனால் தொடர்பு தான் இல்லை..அவரை இங்கே முகநூலில் இன்ஸ்டாவில் டுவிட்டரில்...இப்படி தேடி தேடி தொலைகிறேன்...என்றோ ஒரு நாள் கிடைப்பார் என்று..எங்கள் நட்பை மேலும் மேலும் பிணைப்பாக்கியது எங்களது கடித போக்குவரத்து தான்.. ஆனால் அவர் திருமண பந்தத்தில் இணைந்து அமெரிக்கா சென்ற பிறகு தொடர்பு எல்லைக்கு வெளியே சென்று விட்டோம்.. இப்போதும் தேடிக் கொண்டு தான் இருக்கிறேன்.. அந்த மாதிரியான சிறந்த நட்பு என் மனதில் இருந்து எப்போதும் நீங்காது.. தற்போதும் என்னோடு அதற்கு நிகராக பயணம் செய்யும் நட்புகள் நிறைய பேர் இருக்கிறார்கள்.. ஆனால் கடித தொடர்புக் கொண்ட ஆழ்ந்த புரிதல் உள்ள ஒரே நட்பு அவரை இங்கே இந்த உலக கடித நாளில் நினைவு கூறுவதில் பெருமிதம் அடைகிறேன்...

#உலககடிததினம்.

#நீங்காதநினைவுகள்.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...