ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 30 ஆகஸ்ட், 2023

வாழ்வின் சுவை (5)

 


ஒரு நாள் எல்லாம் மாறும் என்று 

நினைக்காதீர்கள்!

இங்கே எது நடக்க வேண்டும் என்று 

விதி இருக்கிறதோ

அது நடந்து விட்டு போகட்டும்...

அதை திசை மாற்றி விடுவதால் அதன் தன்மையை மாற்றி விடலாம் 

என்று நினைக்காதீர்கள்...

அது ஒரு மோசமான நிகழ்விற்கு 

காரணமாக அமைந்து விடும்...

ஒரு நதியின் போக்கை மாற்றுவதை 

இங்கே ரசிக்க முடியாது...

அது ஒரு துன்புறுத்தல்...

அதனால் தான் சொல்கிறேன்

இங்கே எனது பயணத்தில் எவரும் 

குறுக்கே வராமல் 

இருந்து விடுங்கள் என்கிறேன்...

நான் ஒரு காட்டாறு

சில சமயங்களில்...

நான் அதை விரும்பி ஏற்பதில்லை...

நான் ஒரு அமைதியான 

நதியை போல 

மிதமான சலசலப்போடு ஓடவே 

 விரும்புகிறேன்...

#வாழ்வின்சுவை.

30/08/2023.

புதன் கிழமை

நேரம் இரவு 9:00.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்க்கை ஒரு சமன்பாடு தான் -சூபிஞானி கதை 🎉🦋

  வணக்கம் நேயர்களே 🎻🙏  இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...