ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 9 ஆகஸ்ட், 2023

கருவில் புகாத காற்று

 


காலத்தில் கரைந்து விடும்

நான் வாழும் வாழ்வின்

அந்த துடிப்பற்ற உயிர் நாடி...

கேட்பாரற்று கிடக்கிறது

இங்கே எனது சுவை மிகுந்த

அந்த வாழ்வின் பக்கங்கள்..

குறையொன்றுமில்லை என்று என்னை நானே

தேற்றிக் கொண்டு

பயணிக்க தான் வேண்டும்

என் மனதை

கல்லாக்கிக் கொண்டு...

காலம் என்னை கடத்துகிறது

ஒரு நீராவி போல

என்னை அந்த அதீத மேக நிலைக்கு அப்பால்...

நான் சலனமற்ற பயணத்தை

மேற்கொள்ள என்னை யுகம் யுகமாக பழக்கி வைத்து இருக்கிறேன்...

ஏனெனில் நான் மீண்டும் கருவில் புகாத காற்று...

#ஆத்மஞானம்.

#இசைச்சாரல்வானொலி.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

போர் நிறுத்தம்...

   இத்தனை நாள் தூரமாக நின்று  வேடிக்கை பார்த்த  அமைதி  இன்று எந்த தயக்கமும்  இல்லாமல் என் கைகளில்  வேகமாக ஓடி வந்து  பேரன்பு கொண்டு  என்னை ...