ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 3 டிசம்பர், 2022

நானும் அமைதியும்

 

இங்கே சில அமைதியும்

நிம்மதியும்

என் மனம்

தேடியலையும் போது

ஏனோ விழிகள் மூடி

கிடக்கும் அந்த நிலையை

நான் யாசிக்கிறேன்..

யாசித்தவுடன்

கிடைத்து விடுகிறது

அந்த விழி மூடி

மௌனமான அந்த நிலை..

அந்த நிலையில் 

ஆயிரம் ஆயிரம்

நினைவலைகள் தோன்றி தோன்றி மறைகிறது

ஆழ்ந்த அமைதிக்கு பதிலாக...

ஆசுவாசப்படுத்திக் கொள்ள

எந்த நிலையை

தேர்ந்தெடுத்தாலும்

தேடுகின்ற அமைதியை

காணவில்லை...

அமைதியே

நான் நேசிக்கும்

உணர்வை நீ புரிந்துக் கொள்வதில் உனக்கென்ன பிரச்சினை ...

கொஞ்சம் இரக்கம் கொண்டு

எந்த நினைவுகளும் இல்லாத

ஒரு தனிமையை கொடுத்து

என்னை ஆரத் 

தழுவிக் கொள் ...

என் மூச்சு காற்று

கொஞ்சம் திணறும் படி..

இங்கே அந்த நிலையில்

யுகங்கள் கடந்து

உன் அணைப்பில் கிடக்க வேண்டும்...

ஏங்கி தவிக்கும் இந்த காதலியை

நீ ஏற்றுக் கொள்ள

ஏன் இந்த தயக்கம்??

ஓடோடி வரும்

உன் காலடி சுவடின்

சத்தத்தை தேடியலைகிறது

என் இரு செவிகளும்...

#நானும்அமைதியும்

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காலை சிந்தனை ✨

இனிமையான  இந்த காலைப்பொழுது  உங்களுடைய புதிய  உற்சாக நிகழ்வுக்கான  தொடக்கம் ... இன்பமும் துன்பமும்  நம் மனதில் விளைந்த கற்பனை  அதை கொஞ்சம் வ...