ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 20 டிசம்பர், 2022

உணர்வற்றவர்கள்


 இன்றைய தலையங்கம்:-

திருப்பூர் மற்றும் தொழில் துறையில் பயணிப்பவர்கள் எல்லோரும் தங்கள் வியாபாரம் எப்படி போகிறது என்று கேட்டால் ஏதோ போகிறது என்று சலிப்பாக சொல்கிறார்கள்.. மேலும் விவசாயம் கேட்கவே வேண்டாம்.. இப்படி தமிழ் நாட்டின் வளர்ச்சி முன்னேற்றம் எல்லாம் எதனால் முடங்கி உள்ளது என்று கேட்டால் நிச்சயமாக வரி விதிப்புகள் தான் காரணம் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை..கொரணாவிற்கு பிறகு அரவணைக்க வேண்டிய அரசாங்கமே வரி விதிப்புகளால் மக்கள் வாழ்வாதாரத்தை பற்றி கவலைக் கொள்ளாமல் மேலும் மேலும் வரி விதிப்புகளை கடுமையாக்கிக் கொண்டே சென்றதேயொழிய தொழில் செய்பவர்கள் பற்றி கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.. இந்த நிலையில் மத்திய அரசாங்கத்தின் வரி விதிப்பு கொள்கையை எதிர்த்து தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தொழில் துறையினரையும் ஒருங்கிணைத்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் ஆளும் தரப்பு செய்தால் தான் என்ன? தமிழ் நாட்டில் உள்ளவர்கள் வீரம் மிக்கவர்கள் தைரியசாலி கள் என்பதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து கொண்டே வருகிறதா? எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொள்ளும் மனநிலைக்கு வந்து விட்டார்களா? தெரியவில்லை..மக்களை காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ள ஆளும் அரசாங்கமோ உணர்வற்ற நிலையில் பேசாமல் மௌனமாக பயணிக்கிறது.. ஒரு காலத்தில் மத்திய அரசாங்கத்தை தைரியமாக எதிர்த்து மாநில நலனை காப்பாற்றிய கட்சிகள் தமிழ் நாட்டில் இருந்தது.. தற்போது அதே கட்சிகள் இருக்கிறது.. ஆனால் அந்த #மாநில #உணர்வு எங்கே?????

சாமானிய குடிமக்களின் கேள்வியிது...

பதில் சொல்ல வேண்டிய நிலையில் உள்ளவர்கள் எப்போதும் போல தமது பதவி அதிகாரத்தை காப்பாற்றி கொள்ள ஓடிக் கொண்டே இருக்கிறார்கள் இனியும் அப்படி தான் இருப்பார்கள்.. அதில் சந்தேகமில்லை..

ஆனால் கொஞ்சம் மௌனம் கலைந்து தைரியமாக பதிலாவது சொல்லுங்கள்..

#இன்றையதலையங்கம்

#சாமானியனின்கேள்வி

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காலை சிந்தனை ✨

இனிமையான  இந்த காலைப்பொழுது  உங்களுடைய புதிய  உற்சாக நிகழ்வுக்கான  தொடக்கம் ... இன்பமும் துன்பமும்  நம் மனதில் விளைந்த கற்பனை  அதை கொஞ்சம் வ...