ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 18 ஏப்ரல், 2026

அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி கோப்பையில் ஊற்றப்பட்ட அந்த விலை உயர்ந்த மது ரசம்...

 

 


எத்தனையோ 

கனவுகள் அடங்கிய 

அலங்கரிக்கப்பட்ட 

கண்ணாடி கோப்பையில் 

ஊற்றப்பட்ட விலை உயர்ந்த 

மது ரசத்தின் 🍷 துளிகளில் 

மூழ்கும் இரு உள்ளங்கள்...


அன்றாட தேவைகளுக்கு 

ஓடி ஓடி 

தினசரி நிகழ்வுகளில் 

தொலைத்து விட்டு 

கிடைக்கும் 

ஓரிரு மணித் துளிகளில்...


தன் அளப்பரிய காதலை 

தன் இணைக்கு எப்படியும் 

கடத்தி விட துடித்து 

கணங்கள் போதாமல் 

தோற்று போகும் 

அந்த காதல் உள்ளங்கள்...


ஏதோவொரு கணத்தில் 

இணையோடு ஒன்ற முடியாமல் 

பிரிந்து செல்ல துடித்து 

நீதிமன்றத்தில் 

எத்தனையோ கேள்விகளுக்கு 

வழக்கறிஞர் சொல்லி கொடுத்த 

அந்த தயார் பதிலை சொல்லி... 


அந்த புரிந்துக் கொள்ள 

எந்தவொரு முயற்சியும் 

செய்யாத வாழ்வின் 

அற்புதமான தருணங்கள் 

நீதிபதியின் உத்தரவில் 

கரைந்து ஆழ் மனதில் 

தாங்கொணா ரணத்தை 

கொடுத்து ...


வாழ்வின் மீது இது வரை 

வைத்திருந்த பெரும் மதிப்பை 

வெறுத்து ஒதுக்கும் 

சில பலஉள்ளங்களின் 

ஆழ் மனதில் பதுக்கி வைத்திருக்கும் 

கண்ணீரின் வீரியத்திற்கு 

இங்கே எவரும் ஆறுதல் 

சொல்லி தேற்ற முடியாது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:19/04/26.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகமூடியின் மாய வித்தை...

   பிரதிபலிக்க கூடாத  இடங்களில் எல்லாம்  உணர்வுகளை  மறைக்கும் திரையாக  பலபேருக்கு  கை கொடுத்த போதும்... எதிரிகளை எதிர் கொள்ள  திராணி இருந்த...