வாழ்நாள் முழுவதும் அத்தனை
வாகனங்களிலும்
பயணித்து விட்டேன்...
ஒரு குதிரை பாய்ச்சல் பயணத்தின்
அனுபவத்தை
தந்து மிரள வைத்தது
சில பல அந்த வாகனங்களின்
பயணம்...
காலத்தின் வெள்ளத்தில்
மூழ்கடிக்கப்பட்ட நிகழ்வொன்றில்
நான் மூழ்கிக் கொண்டே
போகிறேன் என்பதை
வருவோர் போவோர் எல்லோரும்
கிசுகிசுத்து
கொஞ்சம் பயத்தோடேயே
விலகி செல்கிறார்கள்...
அந்த வழியாக பறந்த
பறவையின் கண்கள் மட்டும்
எனை ஊடுருவி பார்த்து
மெல்ல மெல்ல தரை இறங்குகிறது...
நான் என்றோவொரு நாள்
அந்த பறவைக்கு வைத்த உணவின்
கடனை தீர்க்க
அது என் உயிரை காப்பாற்ற
பலமணித்துளிகள் போராடி
தன் சிறகுகளால் எனை மேலே
கூட்டி வந்து கரை சேர்த்தது...
நான் சுற்றும் முற்றும் பார்க்கிறேன்
கொஞ்சம் பயத்தோடே...
என் பயத்தை போக்கி
அது தன் சிறகுகளால்
எனை தாங்கி விண்ணில் பறந்தது...
அந்த பயணத்தின் ருசியை
இங்கே நானும்
அந்த பறவையும் தவிர இங்கே
பரந்து விரிந்த அந்த பிரபஞ்சம்
மட்டுமே
அறிந்து கொண்டது ...
ஜட வாகன சங்கமத்தில் எல்லாம்
கிடைக்காத
அந்த பயணத்தின் ருசியை
இன்னும் எத்தனை யுகங்கள்
கடந்தாலும் என்னோடு
பயணிப்பதாக சபதம்
எடுத்துக் கொண்டு
அந்த பறவை என்னிடம் இருந்து
விடைபெற்று கொண்டதில்
என் கண்ணோரத்தில் துளிர்த்தது
கண்ணீர் துளிகள்...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 13/03/25/வியாழக்கிழமை.
அந்தி மயங்கும் வேளையில்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக