எனது அமைதியான
சூழ்ச்சியற்ற பயணத்தை
அங்கே ஆயிரம் ஆயிரம் பேர்
மூர்க்கத்தனமான பயணம் என்று
சொல்லி திரிகிறார்கள்...
நானோ அதை விட ஆனந்தமான
சூழ்ச்சியோடு அடுத்தவர் மனதை
ஆழமாக இரத்தம் வழிய வழிய
துன்புறுத்தி சிரித்து மகிழும்
உங்கள் சம்சார பயணத்தை விட
எதனோடும் ஒப்பிட முடியாத
என் பயணத்தின்
மேலான அமிர்தத்தை
உங்களிடம் இருந்து
பாதுகாத்துக் கொள்வதற்காக
அந்த அமைதியான கடல்
பயணத்தில்
அதை எடுத்துக் கொண்டு
பயணிக்கிறேன்...
எவரது சச்சரவான பேச்சையும்
காதில் வாங்கிக் கொள்ள
முடியாத அந்த அற்புதமான
இடத்திற்கு...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் :02/03/25/ஞாயிற்றுக்கிழமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக