ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 2 மார்ச், 2025

பலகோடி மதிப்புள்ள கட்டிடகாரனும் அந்த பிச்சைக்காரனின் பிரபஞ்ச பயணமும்...


அந்த பிச்சைக்காரரின் 

பிரபஞ்ச பயணத்தை 

தற்போது தான் கூர்ந்து கவனித்து 

பார்த்தேன்...

அத்தனை கோடி மதிப்புள்ள 

கட்டிடத்தின் அருகில் 

தனது பிச்சை பாத்திரம் யார் 

களவாடக் கூடும் என்கின்ற 

தைரியத்தில் நிம்மதியாக 

அங்கே இருந்த மரத்தின் அடியில் 

நிம்மதியாக உறங்கி கிடக்கிறான் 

சற்றும் சஞ்சலங்கள் ஏதுமின்றி...

அந்த எத்தனையோ கோடி மதிப்புள்ள 

கட்டிடத்தின் உள்ளே இருந்த 

மனிதனோ தனது கட்டிடத்தின் 

ஒரு முனை சுவரோரம் 

சென்று கொண்டிருந்த 

அந்த கறுப்பு பூனையின் 

கண்களின் ஒளியில் 

மிரண்டு உறக்கத்தை தொலைத்து 

விடியலில் எழுகிறான் சற்றே 

அயர்வோடே...

அங்கே வெளியே இருந்த 

பிச்சைக்காரனோ சூரிய ஒளி 

தனது உடலில் ஊடுருவி பரவ

எழுந்து அந்த இரவில் 

தொலையாத 

பிச்சை பாத்திரத்தை மெல்ல 

எடுத்துக் கொண்டு நகர்கிறான் 

புதிய உற்சாகத்துடன்...

இன்றைய இரவில் அவனுக்கு 

அடைக்கலம் தருவது எந்த இடம் 

என்று கவலைக் கொள்ளாமல்...

அந்த பல கோடி மதிப்புள்ள 

கட்டிடக்காரனோ இன்று இரவும் 

அந்த கறுப்பு பூனையின் 🐱 

மிரட்டும் விழிகளில் இருந்து 

தப்பிப்போமா என்று சற்றே 

எரிச்சலோடு அன்றைய கடமைகளை 

செய்ய ஆயத்தமாகும் போது 

அந்த பூனை அவனுக்கு குறுக்கும் 

நெடுக்குமாக கம்பீரமாக நடமாடி 

திரிந்ததை மட்டும் அவனால் 

ஜீரணிக்கவே முடியவில்லை...

என்ன செய்வது 

அந்த கட்டிடத்தின் மதிப்பு பற்றி 

அதுக்கு என்ன கவலை 

இருக்க போகிறது?

தற்போது அது தனது பசியை 

தினமும் தீர்க்கும் 

அந்த பிச்சைக்காரனின் 

பிச்சை பாத்திரம் தானே 

அந்த ஜீவனுக்கு 

மதிப்பற்ற செல்வம் ?

இங்கே இவற்றை எல்லாம் வேடிக்கை 

பார்த்துக் கொண்டே 

சற்றே சிரிப்போடு 

கடந்து செல்கிறது காலம் 

இங்கே அதை தவிர வேறு என்ன 

செய்ய இயலும் அதனால் 

நீங்களே சொல்லுங்கள்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:02/02/25/ஞாயிற்றுக்கிழமை.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்வின் சூட்சுமங்கள் எல்லாம்...

காற்றில் தன் தேகத்திற்கு  எந்த பிடிமானமும் கிடைக்காதா  என்று  தேடி அலைகிறது  அந்த சிறிய கொடி... வெகுநேரம் அந்த கொடியின்  தேடலில்  புரிந்துக்...