அவர்கள் கேட்ட
எத்தனையோ கேள்விகளுக்கு
என்னால் திணறாமல்
பதில் சொல்ல முடிந்த என்னால்
நீங்கள் எந்த ஊர் என்று
திடீரென கேட்கும் கேள்விக்கு மட்டும்
என்னால் பதில் சொல்ல முடியாமல்
திகைத்து நிற்கிறேன்...
பின்பு சுதாரித்து
நான் நிரந்தர வைகுண்டவாசி என்று
சொல்லி முடிப்பதற்குள்
அவர்கள் கலகலவென்று
நகைக்கும் ஒலியில்
அங்கே சாலையில்
போவோர் வருவோர்
எல்லாம் திரும்பி பார்த்து
தம் பங்கிற்கு நகைத்து கடந்து
செல்கிறார்கள்...
மீண்டும் என்னிடம் அதே கேள்வி
கேட்கிறார்கள் நான் புரியாமல்
பதில் சொல்வதாக நினைத்து...
மீண்டும் நான் நகைத்துக் கொண்டே
இங்கே நான் வாழாவெட்டியாக
இந்த பிரபஞ்சத்தில் அலைகிறேன்
என்று சொல்லி வைத்தேன்...
அவர்கள் சரிதான் என்று
தம்மை நொந்துக் கொண்டு
மீண்டும் அந்த கேள்வியை
கேட்பதை விட்டு விட்டு
தங்களோடு இதுவரை
உரையாடியதில் பெரும் மகிழ்வும்
ஆனந்தமும் என்று சொல்லி
விடைபெற்று வேகமாக
நடக்கிறார்கள்...
நானோ அப்படி என்ன நான்
அதிசயமாக
சொல்லி விட்டேன் ...
நான் சொன்ன பதிலில் அவர்கள்
திருப்தி இல்லாமல் போகிறார்கள்
என்று யோசித்து நானும்
அந்த சாலையில் இறங்கி
நடக்கிறேன்...
என்னை பார்த்து ஓடோடி வந்து
ஆர தழுவிக் கொண்டது
அந்த காலம்...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:13/03/25/வியாழக்கிழமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக