ஒரு இளைப்பாறுதல் தான்
இங்கே எத்தனை வகை
நிகழ்வுகள் நடந்தாலும்
நமக்கான ஆறுதலாக
உடன் இருந்து பயணிக்கிறது!
அந்த மரத்திற்கு மட்டும் என்ன
வேறு வகையிலா இளைப்பாறுதல்
கிடைத்து விடப் போகிறது?
கிளைகளை அசைத்து
ஏதோ நம்மிடம் உள்ள குமுறலை
கொட்டி விட்டு தானே சில நிமிடங்கள்
அசைவை நிறுத்தி விட்டு
எனது உள்ள கிடக்கையை
தெரிந்துக் கொள்ள ஆவலாகிறது!
நானும் என் வயது முதிர்வை
கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு
அதை கட்டியணைத்து
ஆறுதல் சொல்லி
விடை பெற மனமில்லாமல்
அதனடியில் இளைப்பாறுகிறேன்
இங்கே யாருக்கும் யாரும்
துணையின்றி தவிப்பதாக
ஏன் புலம்புகிறீர்கள் ...
இங்கே அநியாயக்காரர்களின்
கண்ணில் படாமல்
ஓராயிரம் மரங்கள்
உங்களை அரவணைக்க
மௌனமாக காத்திருக்கிறது...
நீங்களோ இங்கே உணர்வற்ற
மானிடர்களின் மடியில்
ஆறுதல் தேடி சோர்கிறீர்கள்?
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 12/03/25/புதன்கிழமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக