ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 14 ஜூன், 2024

ஜனித்துக் கொண்டே இருக்கிறது இரவும் பகலும்...


ஜனித்துக் கொண்டே இருக்கிறது 

இரவும் பகலும்...

என் நிகழ்வுகள் எல்லாம் 

இரையாகின்றன அவைகளுக்கு...

அதன் பசியாற்றி விட்டு 

நான் பசியாறலாம் என்று 

யுகம் யுகமாக காத்திருக்கிறேன்...

என் தோளில் கை போட்டு 

அந்த காலம் மெது மெதுவாக 

என்னை சமாதானப்படுத்தி 

அழைத்துச் சென்றது...

இங்கே எதையும் 

திருப்தி செய்ய இயலாது என்று 

 புரிந்துக் கொண்டு 

நான் பசியாற சில கனிகளை 

சுவைக்க ஆவலோடு எடுக்கும் போது 

அந்த காலம் கொஞ்சமும் 

இரக்கம் இல்லாமல் 

என்னை தரதரவென 

அழைத்துச் சென்ற போது 

என் வாயில் இருந்து கீழே விழுந்த 

அந்த கனியின் 

சிறு துண்டில் இந்த பூமி பசியாறி 

என்னை ஆசீர்வதித்தது..

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 15/06/24.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

  நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர்  கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...