அந்த தந்திரக்காரனின்
பிச்சை பாத்திரம் ஏனோ
இன்று அவன் நினைத்த அளவு
நிறையவில்லை...
அவனோ அந்த ஊரை
சுற்றி சுற்றி வருகிறான்
எப்படியேனும் அந்த
பிச்சை பாத்திரத்தை
அவன் நினைத்த மாதிரி
நிறைத்து விட வேண்டும் என்று...
ஊரை சுற்றி சுற்றி வந்து களைத்து ஒரு மரத்தின் அடியில் படுத்து உறங்கி விடும் போது
எங்கிருந்தோ காற்றில் பறந்து வந்த மயிலிறகு
தஞ்சம் அடைந்த போது
அந்த பிச்சை பாத்திரம் நிரம்பி வழிகிறது...
கண் விழித்து பார்த்த அந்த தந்திரக்காரன் அந்த மயிலிறகை வைத்து ஏராளமான வித்தை காட்ட பேராசை கொண்ட போது
அது அந்த பிச்சை பாத்திரத்தில் இருந்த கண்ணுக்கு தெரியாத துளை வழியே மறைந்து சென்று விட்டது...
இங்கே பெரிய பெரிய தந்திரங்கள் தேவையில்லை...
இலேசான விகாரமற்ற மனதின் அடையாளமான
மயிலிறகின் சிறு தீண்டல் போதும்...
நம் பேராசை எனும் தீயை
அணைத்து விட... என்று அந்த தந்திரக்காரன் உணர்ந்த தருணத்தில் மீண்டும் அந்த மயிலிறகு
அதே கண்ணுக்கு தெரியாத துளையின் வழியாக உள்ளே நுழைந்தது...
#உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை ✨
✍️ #இளையவேணிகிருஷ்ணா.
நாள் 29/06/24/சனிக்கிழமை.
முன்னிரவு பொழுது 10:09.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக