ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 29 ஜூன், 2024

இரவு கவிதை:இமையும் நானும் 🤷


 ஒரு நாள் ஒரு பொழுதேனும்

இப்படி தன்னை மறந்து உறங்க துடிக்கும் இமைகளுக்கு இங்கே 

ஆயிரம் ஆயிரம் கவலைகளை போற போக்கில் அள்ளித் தெளித்து விட்டு போகிறது காலம்...

நானும் மனதும் தான் இங்கே 

இமைகளை கெஞ்சிக் கூத்தாடி உறங்க வைக்கிறோம்...

மீண்டும் கொஞ்சம் எல்லாம் மறந்து இமைகள் மூடும் போது அங்கே தலை வாசல் வழியே தலையை எட்டி பார்த்து காலம் தனது கைகள் நிறைய கவலைகளை கொண்டு வந்து வீடு முழுக்க இறைத்து விட்டு ஓடோடி போகிறது நொடிப்பொழுதில்...

நான் இமைகளை கை கூப்பி கேட்டுக் கொண்டு 

அங்கே இறைந்து கிடந்த கவலைகளை ஒரு மெலிதான துணியை வைத்து சத்தம் இல்லாமல் 

தூய்மை செய்து முடிக்கும் போது நடுநிசி இரவு 

என்னையும் என் இமைகளையும் கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் சிரித்து வைத்து போனதில் 

எனது இல்லம் அங்கே சத்தம் இல்லாமல் கண்ணீர் வடிப்பதை யார் அறியக் கூடும்???.

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

#இமையும்நானும்.

நாள்:29/07/24/சனிக்கிழமை.

முன்னிரவுப் பொழுது 10:32.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பெரும் போரின் உக்கிரத்தை தணித்து...

 நீயோ குருட்டு பிடிவாதத்தால் எவரின் தூண்டுதலாலோ விலகி விலகி பயணிக்கிறாய்  என்னிடம் இருந்து... அந்த உக்ரைனை போல... நானோ உன்னை  என் பேரன்பின் ...