அன்றாடம் போகிறது
என் அனுமதிக்காக
அது எப்போதும்
காத்திருப்பது இல்லை..
கைகளில் ஆயிரம்
கனவுகளை வைத்து
செய்வதறியாது
இங்கே திகைத்து
நிற்பதை பார்த்து
காலம் கொஞ்சம்
சத்தமாக சிரித்து
வைக்கிறது...
ஏன் இப்படி கனவுகளோடு
போராடி போராடி
என்னை தின்று தீர்க்கிறாய் என்று...
சுவைத்து முடிந்தால்
இங்கே எல்லாமே
சுவையற்ற ஒன்றாக தானே
இருக்க போகிறது..
அதற்கு ஏன் இப்படி
அன்றாடத்தோடு போராடி
சோர்கிறாய்...
அன்றாடத்தின் அத்தனை நொடிகளும்
நீ ரசித்து சுவைக்க
காத்திருக்கிறது..
நீயோ அதிவேகமாக
அதை மென்று
சக்கையாக துப்பி விடுகிறாய்
இங்கே எதுதான்
அதனதன் தன்மையை
புரிந்து நடக்கிறது
என்று காலம்
முணுமுணுப்பதை
எவரும் இங்கே காதில்
வாங்காமல்
அவரவர் கனவுகளை
சுமந்து அதிவேகமாக
பயணிக்கிறார்கள்
அந்த நெடுஞ்சாலையில்..
#இளையவேணிகிருஷ்ணா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக