ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 24 ஆகஸ்ட், 2022

வாழ்வை அதன் போக்கில் வாழ்ந்து விடுங்கள்


போன போக்கில் வாழ்ந்து விட்டு போவது என்பது எளிதானதாக தோன்றிவிடும்.. ஆனால் அப்படி வாழ நீங்கள் கொஞ்சம் முயற்சி செய்து பாருங்கள்..திணறி தான் போவீர்கள்.. சோதனை முயற்சியாக நீங்கள் அதை முயற்சி செய்து பாருங்கள்.. அப்போது அதில் உள்ள துன்பம் உங்களுக்கு புரியும்.

பகவான் கிருஷ்ணர் வாழ்வை நீங்கள் உற்று நோக்கி பாருங்கள்.. அவர் இளமை பருவம் முழுவதும் நண்பர்களோடும் மாடு கன்றுகளோடும் சுற்றி திரிந்தார்.. இடையிடையே அவரை கொல்ல முயன்றவர்களுக்கு நல்ல பாடத்தை கற்பித்தார்..இளமை காலத்தில் தனக்கேயுரிய காதல் எண்ணங்களோடு கோபியர்களோடு ராச லீலை புரிந்து திரிந்தார்.. பிறகு  அங்கங்கே பஞ்சாயத்து... அவர் ஓரிடத்தில் நில்லாமல் பயணித்துக் கொண்டே இருந்தார்.. அவர் வாழ்வை பெரிதாக யோசித்து தனக்காக இப்படி தான் வாழ வேண்டும் என்று நினைத்து வாழ முயற்சி செய்யவில்லை..வாழ்வை அதன் போக்கில் வாழ்ந்து விட்டு வைகுண்டம் சென்றார்.. அப்போது அவர் குலத்தை பற்றி யோசித்து இருக்கக் கூடும்..தானே எதையும் யோசித்து வாழவில்லை.. நமது குலமும் அப்படி தான் இந்த உலகில் வாழ தெரியாமல் துன்பப் படும் என்று நினைத்து தனக்கு முன்பே தனது குலத்தை ஒருவருக்கு ஒருவர் மது போதையில் பகைக் கொண்டு அடித்து கொண்டு தனது குலத்தை ஒரு முடிவை நோக்கி அழைத்துச் சென்று விட்டு தான் தான் வைகுண்டம் கிளம்பினார்..

இதை எதற்கு சொல்கிறேன் என்றால் நாம் அனைவரும் பல ஆயிரம் ஆயிரம் கனவுகளை மனதில் தேக்கி வைத்து கொண்டு அதை நோக்கி பயணிக்கிறோம்... இதில் ஒன்றும் தவறில்லை.ஆனால் அத்தனை கனவுகளும் பலித்து விட வேண்டும் என்று நினைப்பது தான் தவறு.. மனதில் தேவையில்லாத சஞ்சலங்கள் இதனால் தான் உருவாகிறது.. கொஞ்ச காலம் சென்றதும் வாழ்வை கொஞ்சம் திரும்பி பார்த்தால் ஏதோவொரு சலிப்பு தான் மிஞ்சும்.. ஒவ்வொரு நொடியும் ஆனந்தமான நொடிகள்.. இங்கே அதை உணருங்கள்..

பகவான் கிருஷ்ணர் சொல்வதை போல எந்த செயலையும் செய்யுங்கள்.. பலன் கிடைக்கவில்லை என்றால் அதையே பிடித்துக் கொண்டு சோர்ந்து உட்கார்ந்து விடாதீர்கள்.. அது தான் நீங்கள் செய்யும் பெரிய தவறு.. அதனால் தான் கர்மாவை செய்ய உனக்கு அதிகாரம் உள்ளது.. அதன் பலனில் உனக்கு அதிகாரம் இல்லை என்று மிகவும் தெளிவாக சொல்லி இருக்கிறார் பகவத் கீதையில்..

வாழ்வின் ருசியை உணருங்கள்

வாழ்க்கை ஆனந்தமயமானது..

#இளையவேணிகிருஷ்ணா.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...