ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 2 ஆகஸ்ட், 2018

தருணங்கள்

அன்பர்களே வணக்கம்.
       இப்போது நாம் பார்க்க இருப்பது தருணங்கள்.தருணங்களையும் வாழ்க்கையையும் பிரிக்க முடியாது. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு தருணங்கள் பிறரிடம் பகிர்ந்து கொள்வதற்கு ஆயிரம் ஆயிரம் இங்கே கொட்டி கிடக்கின்றன. ஆனால் அந்த தருணங்களை செவி கொடுத்து கேட்கத்தான் ஆளில்லை.
        உண்மையிலேயே மனிதர்களை தருணங்கள் ஆள்கின்றன என்றால் அது மிகையில்லை. ஏனெனில் தருணங்களை எதிர்கொள்ளாத மனிதர்கள் இந்த பூமியில் இல்லை. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் மகிழ்ச்சியான சோகமான ஆச்சரியமான தருணங்கள் மறைந்து இருக்கிறது.
      ஒவ்வொரு மனிதனும் தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் தமதுவாழ்வில் நிகழ்ந்த மகிழ்ச்சியான தருணங்களை அசைப்போட தயங்குவதில்லை.எவராவது அருகில் இருந்தால் அந்த தருணங்களை பகிர்ந்து மகிழ்ச்சி கொள்கிறார்கள். இல்லை என்றால் நினைவுகளால் தனக்கு தானே சொல்லி கொண்டு சந்தோஷம் அடைகிறார்கள்.
     சோகமான தருணங்களை பெரும்பாலான மனிதர்கள் மறக்கவே விரும்புகிறார்கள்.ஆனால் எதிர்பாராத விதமாக அவர்களால் அந்த தருணங்களை மறக்க முடிவதில்லை. மகிழ்ச்சமகிழ்ச்சியான தருணங்களை போல இந்த தருணங்களை அசைப்போட விரும்பாததால் சோகமான தருணங்களை எவரோடும் பகிர்ந்து கொள்ளவே விரும்புகிறார்கள்.அதனால் ஓரு நன்மையும் விளையாமல் இல்லை. அவர்கள் அந்த தருணங்களை வெளியே தள்ளி விடுவதால் மிகவும் மனம் இலேசாக ஆகி தனது பணியை உற்சாகமாக செய்ய சென்று விடுவார்கள்.
           பல மனிதர்கள் தனது வாழ்வில் நிகழ்ந்த ஆச்சரியமான தருணங்களை நினைத்து மகிழ்கிறார்கள். இந்த தருணங்கள் அவர்களை உற்சாகப்படுத்து விடுகிறது. எப்படி எனில் அவர்கள் மற்றவர்களால் எளிதாக சாதிக்க முடியாததை இவர்கள் வாழ்வில் கடுமையான முயற்சியால் சாதித்து இருப்பதை மற்றவர்கள் மிகவும் உணர்ச்சிக்கரமாக பாராட்டி இருப்பார்கள். இது இவர்கள் அந்த தருணங்களை நினைக்கும் போதெல்லாம் மிகவும் உற்சாகப்படுத்தி நல்ல பல சாதனைகளை செய்ய வைக்கிறது.
         சில மனிதர்கள் தனது பள்ளி பருவ தருணங்களை நினைவுகூர்ந்து அந்த வயதில் தாம் நடந்து கொண்ட விதம் தாம் செய்த குறும்புத்தனம் ஆசிரியர்களிடம் தவறு செய்து மாட்டிய தருணங்களதருணங்கள் மேலும் நண்பர்தளுடன் சேர்ந்து சுற்றிய இடங்கள் தனது முதல் காதல் ....இன்னும் எத்தனையோ தருணங்களை எதிர்க்கொண்டு அந்த தருணங்களை பசுமையான நினைவுகளாக பாதுகாத்து வருவார்கள்.
      எது எப்படியோ நேயர்களே நமது வாழ்க்கையில் தருணங்கள் என்று ஒன்று இல்லை என்றால் நம் வாழ்வு வறண்ட பாலைவனமாகத்தான் காட்சி அளித்துக்கொண்டு இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. என்ன நேயர்களே நான் சொல்வது சரிதானே.
        ஆனந்தமான தருணங்களை நினைத்து கடுமையான தருணங்களை நாம் கடந்து வந்த பாதையை மற்றவர்களுக்கு வழிகாட்டியாக வழிக்காட்டி விட்டு சோகமான தருணங்களை கதைகளாக நமக்குள் வடித்து விட்டு காத்திருப்போம் ஒரு புதிய விடியலில் புதிய தருணங்களுக்காக.அது எப்படிப்பட்ட தருணங்களை நமக்கு அளிக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்புடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சித்த நிலை யாதென்று புரிகின்ற வேளையில்...

சித்த நிலை யாதென்று  புரிகின்ற வேளையில்  சுவையுள்ள பதார்த்ததின் வாசம்  நாசியை வசீகரிக்கிறது... சுத்தமான ஆத்மாவின்  தீராத தாகத்தை கண்டுக்கொள்...