அன்பர்களே வணக்கம்.
இப்போது நாம் பார்க்க இருப்பது அகங்காரம்.என்ன புயவில்லையா?ஆம். இன்று அகங்காரத்தையும் அதனால் மக்கள் படும் துன்பங்களையும் நாம் பார்க்க இருக்கிறோம்.அகங்காரம் என்று அந்த சொல்லை உச்சரித்தாலே நம்முள் அகங்காரம் அமைதியாக உள்நுழைவதை நம்மால் அறிய முடியும்.
சரி இப்போது எதனால் எல்லாம் மக்கள் அகங்காரம் கொள்கிறார்கள் என்று பார்ப்போம். முதலில் வருவது பணத்தால் வரும் அகங்காரம்.பணம் ஒரு மனிதனை இன்று மனிதனாக வாழவிடவில்லை என்றே சொல்லலாம். ஒருவன் தற்காலத்தில் வெறிபிடித்ததைப்போல சொத்தை சேர்க்கிறான்.அந்த சொத்தால் இவன் அடையும் அகங்காரத்தை சொல்லி மாளாது.இது பணத்தால் அதன் வழி சேர்த்த சொத்தால் வரும் அகங்காரம்.இந்த அகங்காரம் அவனை விட்டு அவ்வளவு எளிதில் போகாது.ஆனால் இறைவன் அவனை ஆடுடா ஆடு என்று ஆடவிட்டு இறுதியில் அடக்கிவிடுவான்.ஒன்று நோயை கொடுத்து மற்றொன்று ஏதோவொரு வகையில் வெறுமையை கொடுத்து. அப்போது இவன் உணர்ந்து பயன் இல்லை என்றே கூறலாம். ஏனெனில் வாழும் போது அனைவரையும் ஒருவித ஏளனத்தில் பார்த்ததே காரணம். இந்த அகங்காரம் அவனின் பிறவியை பெருக்கும்.அவன் பிறவிபயனை பெற வேண்டும் என்றால் அந்த பணத்தால் நிறைய புண்ணிய காரியத்தை செய்ய வேண்டும். அதுதான் வழி.மேலும் ஒரு சொல்வழக்கு உள்ளது. அகங்காரம் உள்ள இடத்தில் குபேரன் இருக்கமாட்டான் என்று. அதனால் பணத்தால் நாம் என்றுமே அகங்காரம் இல்லாமல் இருப்போம்.
மற்றொரு அகங்காரம் வித்யா அகங்காரம் .இந்த அகங்காரம் மிக கொடுமையானது.இராவணனை இந்த அகங்காரம் தான் போட்டு வதைத்தது என்று சொல்லலாம். ஏனெனில் இராவணன் மிகவும் எல்லா கலைகளையும் கற்று தேர்ந்த கலைஞன்.ஆனால் ஒருசமயம் கயிலாய மலை கடக்கும் போது அகங்காரத்தால் கடக்க முயன்றான்.அந்த அகங்காரமே அவன்மேல் சிவபெருமான் கோபம் கொள்ள செய்தது.ஆனால் தன்னுடைய சாதூர்யத்தால் இசைப்பாடி சிவனின் கோபத்தில் இருந்து தப்பி விட்டான்.
துரியோதனனும் அப்படியே.அவனை கதாயுத்தத்தில் வெல்ல இந்த உலகத்தில் யாருமே இல்லை என்று நினைத்தான்.பீமனும் கூட தன்னிடம் தோற்றுவிடுவான் என்று நம்பினான்.ஆனால் இறைவன் அவனுடைய அகங்காரத்தை அடக்கவே அவனை தோல்வியடைய செய்தார்.
நாரத மகரிஷிக்கு ஒரு அகங்காரம்.அது என்ன என்றால் தன்னை விட நாராயணனை பக்தி செய்ய இந்த உலகத்தில் யாரும் இல்லை என்று நம்பினார்.ஆனால் ஒரு ஏழை விவசாயியின் ஒரேஒரு நாராயண சப்தத்தை நாரதருக்கு சுட்டிக்காட்டி அந்த நொடியில் நாரதர் அகங்காரத்தை அடக்கினார் நாரயாணன்.அதனால் அகங்காரம் என்பது எந்த ரூபத்தில் எப்படி எப்போது நம்மை படுபாதாளத்தில் தள்ளி விடும் என்று இங்கே ஒருவரும் அறியார்.
எவ்வளவு பெரிய ஞானிகள் கூட இதற்கு தப்பியதில்லை.அதனால் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பதவியும் புகழும் சேரும் போது நாம் நிச்சயமாக அகங்காரத்தை நம்முள் நுழையாமல் பார்த்து கொண்டாலே போதும். நாம் நிச்சயமாக நல்ல நிலையில் வாழலாம்.
இன்று சமுதாயத்தில் மக்கள் தேவையில்லாத அகங்காரத்தை மலைப்போல சேர்த்து வைத்திருக்கிறார்கள்.இது எவ்வளவு துன்பத்தை அவர்கள் வாழ்க்கையில் தருகிறது என்பதை அறியாமலே.அதனால் நாம் ஆனந்தமான வாழ்க்கை வாழ தோவையில்லாத அகங்காரத்தை தூக்கி எறிந்து விட்டு ஒவ்வொரு பதவியும் புகழும் சேரும் போது அதை இறைவன் திருவடியில் சேர்த்து விட்டு நாம் நிம்மதியாக ஆனந்தமாக வாழ்வோமாக!.
ஆனந்தத்தை அகங்காரத்தில் நாம் தொலைத்து விட்டால் பிறகு ஆனந்தத்தை நாம் எப்படி தேடினாலும் கிடைக்காது.அதனால் நாம் அகங்காரத்தை தொலைத்து ஆனந்தமான வாழ்க்கை வாழ முயல்வோமாக!என்ன நேயர்களே நான் சொல்வது சரிதானே!.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக