ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 1 ஆகஸ்ட், 2018

தேடல்

அன்பர்களே வணக்கம்.
                   நாம் இப்போது பார்க்க இருப்பது தேடல்.தேடல் என்று சொன்னவுடனே உங்கள் அனைவருக்கும் அவரவர் வீட்டில் நடக்கும் காலைகாட்சிகள் தான் ஞாபகம் வரும். ஆமாம். என்ன புரியவில்லையா.ஆமாம். நாம் அனைவரும் தினமும் வேலைக்கு போகிறோம்.நம் வீட்டு குழந்தைகள் தினமும் பள்ளிக்கு செல்கிறார்கள். ஆனால் முதல் நாள் இரவு ஒரு திட்டம் வகுத்து எவரும் வேலை செய்வதே இல்லை.
             நாம் அனைவரும் காலையில் எழுந்தவுடன் பரபரப்பாக இருந்தே பழகிவிட்டோம்.இப்படியே நாம் செய்தால் கண்டிப்பாக நம்மையும் அறியாமலே மன அழுத்தம் வயத்தானே செய்யும். முதல்நாள் இரவு விரைவாக அடுத்தநாள் கடமைகளை திட்டமிட மறப்பதால் நாம் அனைவரும் தேவையில்லாத பரபரப்புக்கு ஆளாகிறோம்.இது தேவையில்லாத ஒன்று என்பது அப்போது மட்டுமே அதாவது அந்த நேரத்தில் மட்டுமே சிந்திக்கிறோம்.இந்த பழக்கத்தை நாம் மாற்றிக்கொள்ள முயல வேண்டும்.
           அடுத்ததாக நாம் குழந்தைகளை அழகாக பயிற்சி கொடுத்து வளர்க்க வேண்டும். அப்போது தான் நமது சுமைகள் குறையும். மேலும் அவர்கள் ஒழுங்காக நேர்த்தியாக அவர்கள் வேலைகளை செய்வார்கள். அதாவது முதலில் நாம் குழந்தைகளுக்கு எந்த பொருளையும் எடுத்தால் எடுத்த இடத்தில் வைக்க பழக்க வேண்டும். இதுவே நாளடைவில் எந்த பொருளையும் உரிய இடத்தில் வைக்க அவர்களுக்கு தோன்றும்.
             நாம் முதலில் அதை செய்ய வேண்டும். எந்த நல்ல பழக்கத்தையும் நாம் நம்மில் இருந்தே தொடங்க வேண்டும். நாம் முதலில் ஒழுங்காக ஒரு செயலை கடைப்பிடித்தால் தான் நமது குழந்தைகள் அதை செய்வார்கள். நாம் ஏனோதானோ என்று இருந்து விட்டு குழந்தைகளை குறை சொல்வதில் நன்மை வராது.ஏனெனில் குழந்தைகள் நமது ஒவ்வொரு செயலையும் பார்த்து கற்று கொள்வதே அதிகம்.
               காலையில் ஒவ்வொரு வீட்டிலும் நீங்கள் சென்று பார்த்தீர்களானால் ஒரு மகாபிரளயமே நடந்து முடிந்திருக்கும்.அவர்கள் அலுவலகம் செல்லும் முன்பாக.அவர்கள் குழந்தைகள் பள்ளி செல்லும் முன்பாக.ஏன் இந்த அவஸ்தை .தினமும் ஏன் இந்த பரபரப்பு. கொஞ்சம் நிதானமாக யோசியுங்கள்.
           இரவு அனைவரும் சேர்ந்து ஒரே நேரத்தில் சாப்பிடுங்கள். இது அனைவருக்கும் ஒத்து வராது.வீட்டில் ஒருவர் மட்டும் வேலைக்கு செல்பவர்களுக்கு மட்டும் ஒத்து வரும். ஒத்து வருபவர்கள் கடைபிடியுங்கள்.ஏனெனில் அப்போது தான் உறவு பலப்படும். மேலும் அனைவரும் ஒருவரையொருவர் பார்த்து கொள்வதும் அப்போது தான் என்றே எனக்கு சொல்ல தோன்றுகிறது.
       இரவு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அதாவது ஒன்பதில் இருந்து பத்து மணிக்குள் உறங்க சென்று விடுங்கள். மேலும் விடியற்காலையில் எழுந்து கூட அன்று செய்ய வேண்டிய வேலைகளை திட்டமிடலாம்.முதலில் உங்கள் வண்டி சாவியை ஒரே இடத்தில் வைத்து பழகுங்கள். ஏனெனில் நிறைய பேர் காலையில் தேடுவது இந்த பொருளைத்தான்.
      குழந்தைகள் விடியற்காலையில் எழும் பழக்கத்தை ஏற்படுத்தி வையுங்கள். அந்த வேலையில் எழுந்து காலை கடனை முடித்து கையுடன் குளிக்க சொல்லுங்கள். குளித்து முடித்து வந்தவுடன் சில பிரார்த்தனை பாடல்களை கற்று கொடுங்கள். அதை மனப்பாடம் செய்யும் வரை அதே பாடல் தான். அடுத்த நாள் கண்டிப்பாக அந்த பாடலை அவர்கள் மறக்காமல் பாட சொல்லுங்கள். இப்படி தினமும் ஒரு தேவார திருவாசக பாடலை கற்று கொடுங்கள். மேலும் அவரவர் வழிபாட்டு பாடல்களை தினமும் பாடட்டும்.
           குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் எந்த புது விசயமாவது தேடி தேடி கற்று கொள்ளுங்கள். ஏனெனில் புது விசயங்களை கற்கும் போது மனம் தானாகவே உற்சாகம் அடையும். அதனால் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் போது உங்கள் மேல் இனம் புரியாத அன்பும் நம்பிக்கையும் வளரும்.
            தேடல்கள் என்பது இதனோடு முடிவடைவதில்லை.ஏனெனில் தேடல் என்பது ஒரு பெரிய சமுத்திரம்.குழந்தை முதலே ஆன்மதேடலுக்கு வழிவகை செய்ய வேண்டும். ஏனெனில் அந்த தேடல் இல்லை என்றால் வாழ்க்கை முழுமையடையாது.அதுவே தேடலில் சிறந்த தேடல்.
      ஆன்ம தேடலை நாம் ஆரம்பிக்கும் போது மற்ற தேடல்கள் தானாக குறைந்து விடும். அதுவே நமது உயிர் மூச்சாக கொண்டால் நாம் பிறவிபயனை கண்டிப்பாக எய்தமுடியும்.என்ன அன்பர்களே நான் சொல்வது சரிதானே.நாம் உண்மையான தேடலை தேடி அடியெடுத்து வைக்கும் போது படிபடிப்படியாக ஆனந்தத்தை கைகொள்வோம்.என்ன கடைப்பிடிப்போமா நேயர்களே?.வாருங்கள் ஆனந்தத்தில் மூழ்குவோம்.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பெரும் போரின் உக்கிரத்தை தணித்து...

 நீயோ குருட்டு பிடிவாதத்தால் எவரின் தூண்டுதலாலோ விலகி விலகி பயணிக்கிறாய்  என்னிடம் இருந்து... அந்த உக்ரைனை போல... நானோ உன்னை  என் பேரன்பின் ...