அன்புடையீர் வணக்கம்.
இன்று நாம் பார்க்க இருப்பது உற்சாகம். ஆமாம் நேயர்களே. உற்சாகம் நமக்கு மிகவும் தேவையான ஒரு விட்டமின். இது ஒன்று இருந்து விட்டால் போதும். நாம் வாழ்க்கையில் கண்டிப்பாக நினைத்ததை சாதிக்கலாம். ஆனால் உற்சாகம் இல்லை என்றால் நம்மால் எதையும் சாதிக்க முடியாது. நினைவில் கொள்ளுங்கள்.
நாம் சமுதாயத்தில் சில பேரை பார்க்கலாம். எப்போது பார்த்தாலும் எதையோ பறிக்கொடுத்ததைப்போலவே இருப்பார்கள். அவர்களுக்கு நான் ஒன்று நான் சொல்ல விழைகிறேன். நீங்கள் எவ்வளவு தோல்வியை வேண்டும் என்றாலும் வாழ்க்கையில் சந்தியுங்கள். ஆனால் உற்சாகத்தை உங்களை விட்டு பிரித்து விடாதீர்கள். உற்சாகம் உள்ள வரை நீங்கள் கண்டிப்பாக எதையோ எப்படியோ சாதித்து பேரும் புகழும் அடைந்து விடுவீர்கள்.
சில மனிதர்கள் இருக்கிறார்கள். ஒருவர் ஒரு காரியத்தை தொடங்குவதற்கு மேன்பாகவே அவர்களை உற்சாகம் இழக்க வைத்து ஒரு மூலையில் உட்கார வைத்து விடுவார்கள். இதனால் அவர்கள் பாவம். எதையும் சாதிக்க முடியாமல் வாழ்க்கையை ஏனோதானோ என்று வாழ்ந்து விட்டு சென்று விடுவார்கள். இதனால் யாருக்கு என்ன லாபம்?சொல்லுங்கள் பார்க்கலாம்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகம் தான் தற்போதைய சூழலில் அனைவருக்கும் தேவைப்படுகிறது.ஆனால் அந்தோ பரிதாபம்.அவர்கள் தேடும் உற்சாகத்தை கொடுக்கும் மனிதர்கள் தான் அரிதாகி வருகிறார்கள். ஏனெனில் பொறாமை கூட காரணமாக இருக்கலாம்.
ஒருசில வீட்டில் போய் பார்த்தால் எப்போது பார்த்தாலும் பிள்ளைகளை திட்டிக்கொண்டே இருப்பார்கள். ஏன் என்று கேட்டால் அந்த பிள்ளைகள் மேல் ஆயிரம் குற்றச்சாட்டு வரும். அத்தனையும் உப்பு சப்பில்லாத குற்றச்சாட்டு தான். நேயர்களே உங்களிடம் ஒன்று மட்டும் உங்களிடம் சொல்ல விழைகிறேன். உங்கள் பிள்ளைகளை தாழ்த்தி பேசிபேசி அவர்கள் இருக்கும் அறிவை நீங்கள் மழுங்கடிக்கிறீர்கள் என்றால் அது மிகையாகாது.
உற்சாகம் என்பது ஒரு சாதாரண மருந்தில்லை.அது ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான மாமருந்து. இதை நாம் ஒவ்வொருவரும் பொக்கிஷமாக போற்ற வேண்டும். மேலும் நாம் உற்சாகமாக இருந்தால் அதனால் நாலுபேர் நன்மை அடைகிறார்கள் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?.நம்பமாட்டீர்கள்.ஏனெனில் எதுவும் உங்களுக்கு கண்ணுக்கு தெரிந்த பொருளாக இருக்க வேண்டும். ஆனால் நான் சொல்வது உண்மை. ஒவ்வொரு உற்சாகமான மனிதர்களிடத்திலும் ஒரு நேர்மறை எண்ணங்கள் உதயமாகி அது அவர்கள் இருக்கும் இடம் முழுவதும் பரவுகிறது. இதனால் அங்கிருப்பவர்கள் ஏதோவொரு துக்கத்தில் இருந்தாலும் அவர்களையும் அறியாமல் அந்த துக்கம் மறைந்து விடுகிறது. இது அனுபவ உண்மை.
ஒருசிலர் சொல்வதை நீங்கள் கண்கூடாக கேட்டிருக்கலாம்.நான் அங்கு இருந்தேன். எப்படி என் துன்பம் பறந்தோடியது என்று தெரியவில்லை என்று. அதெல்லாம் இந்த உற்சாக மனிதர்கள் அங்கே இருந்ததால்தான்.
நாம் ஒருத்தரை பணம் கொடுத்து தான் உயர்த்த வேண்டும் என்று இல்லை. ஒரு அன்பான ஆதரவான முதுகில் தட்டி கொடுத்தல் என்ற செயலை மட்டும் தொடர்ந்து செய்து வந்தால் போதும். அவர்கள் ஆச்சரியப்படும்படி முன்னேறுவார்கள்.இது நிஜம். இது எனது அனுபவ உண்மையும் கூட.
எனது தாயார் நான் படிக்கும் வயதில் பெரிய பெரிய தலைவர்கள் சாதித்ததை சொல்லி சொல்லி என்னை உற்சாகப்படுத்துவார்கள்.ஏன் என்னை பாரதத்தை ஆண்ட இந்திராகாந்தியுடன் என்னை ஒப்பிட்டு பேசும் போது என்னையும் அறியாமலே நான் உற்சாகம் அடைந்து நான் அவர்களைப்போல ஒருநாள் வருவேன் என்று நம்பிக்கை கொண்டேன். அதனால் நேயர்களே உற்சாகம் எனும் எளிய மருந்தை உங்களால் ஏன் உங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்க முடியாது. முயற்சி செய்யுங்கள்.
நேயர்களே உங்கள் பிள்ளைகளுக்கு உற்சாகம் எனும் ஊட்டத்தை கொடுத்து கொண்டே வாருங்கள். உங்கள் பிள்ளைகள் தான் வருங்கால தலைவர்கள் அறிவியல் விஞ்ஞானிகள் வானியல் ஆராய்ச்சியாளர்கள்.....இப்படி இன்னும் சொல்லி கொண்டே போகலாம். ஆதலால் இப்போது இருந்தே அந்த நல்ல காரியத்தை செய்யுங்கள். நல்ல வழிக்காட்டியாக உங்கள் பிள்ளைகளுக்கு இருந்து ஆனந்தமாக வாழுங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக