ஆனந்தமாக வாழுங்கள்
வாழ்க்கை பற்றிய புரிதல்
திங்கள், 16 ஜூலை, 2018
தானம் செய்யுங்கள்
அன்பர்களே வணக்கம்.
இன்று நாம் பார்க்க இருப்பது தானதர்மங்கள்.இன்று பெரும்பாலானவர்கள் நிறைய சம்பாதிக்கிறார்கள்.ஆனால் தர்ம சிந்தனை இல்லை. அப்படியே இருந்தாலும் வெறும் விளம்பரத்திற்காக செய்கிறார்கள். நிறைய சம்பாதித்தால் அதை நமது குடும்ப உறுப்பினர்களுக்கே செலவு செய்கிறார்கள்.
சிலப்பேர் தேவை இருக்கிறதோ இல்லையோ நிறைய செலவு செய்து பணத்தை வீணடிக்கிறார்கள்.இதை தட்டிக்கேட்டால் ஸ்டேடஸ் அது இது என்று பிதற்றல்கள் இருக்கும். ஏன் அந்த தேவையில்லாத ஆடம்பரமான செலவை குறைத்து கொண்டு நாலு ஏழை பிள்ளைகளை படிக்க வைத்தால் அந்த பிள்ளைகள் வாழ்க்கையில் கல்வி ஒளி ஏற்றக்கூடாது.
உனக்கு இறைவன் அபரிதமான செல்வம் கொடுத்து இருக்கிறார் என்றால் அதை உன்மூலம் நாலுபேர் நன்மை அடைவதற்கு தான். அதை உங்கள் இஷ்டத்துக்கு செலவுகள் செய்து லட்சுமியை அவமானம் படுத்தக்கூடாது.
உங்கள் தேவைகளை குறைத்து வாழுங்கள். நீங்கள் உங்கள் அபரிதமான செல்வத்தை நன்கு தானதர்மங்கள் செய்யுங்கள். கல்வி கொடுங்கள். நிறைய சேவைகளை அந்த செல்வத்தை வைத்து செய்யுங்கள்.
நீங்கள் இந்த செல்வத்தை எப்படி சேலவு செய்கிறீர்கள் என்று இறைவன் பார்த்து கொண்டு இருக்கிறார் என்பதை ஞாபகம் வையுங்கள்.
தானதர்மத்தில் ஈடுபாடு கொண்டு அடுத்தவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள்.அதில் தான் உங்கள் ஆனந்தம் அடங்கியுள்ளது.வாழ்த்துக்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...
அந்த பிரமாண்டமான வீட்டில் வாழ்ந்து கொண்டு இருப்பவர் சில நாட்களில் உற்சாகம் இழந்து அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய அந்த வீட்டில் உள...
-
எத்தனையோ சலசலப்பான நகர்வுகளுக்கு மத்தியில் ஒரு புழுதியென அங்கே பறந்து காலமெனும் வெளியில் கலக்கிறேன்... இங்கே எனக்கென்று ஒரு அடையாளம் ...
-
என்னை நானே அறியாமல் மிகவும் கூர்மையான பார்வையால் உற்று பார்க்கிறது என் வீடு.. நான் என்னை மறந்து பாடும் பாடல்களை மெய் மறந்து ரசித்து கேட்...
-
பேரன்பு எனும் உணர்வை குழி தோண்டி புதைத்து விட்டு பேரன்பை தேடி அலைந்து திரிகிறேன்... கேட்க நாதியற்று.. நான் கொஞ்சம் பரவாயில்லை அங்கே பலபேர் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக