ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 4 பிப்ரவரி, 2025

நானும் அந்த கிழிந்த சட்டையின் காதலும்...

 


நீண்ட நாள் என் மேனியோடு

ஒட்டி உறவாடிய அந்த சட்டை 

நான் விடை பெறட்டுமா என்று 

என்னிடம் மெல்லிய குரலில் 

தனது கண்ணீரை அடக்கி கேட்கிறது...

நானோ அதை பிரிய மனமில்லாமல் 

இன்னும் ஒரு நாள் 

என்னோடு சேர்ந்து 

பயணிக்கக் கூடாதா என்று 

ஏக்கமாக கேட்கிறேன்...

அதுவோ இல்லை இல்லை என்று 

மறுத்து விட்டு 

எனை நீ 

பிரிந்து விடுவது தான் 

நான் உன் பெரும் காதலுக்கு 

கௌரவத்திற்கு 

செய்யும் மரியாதை என்று 

மேலும் கிழிந்து தன்னை 

தனிமைப்படுத்திக் கொண்டு

என் வீட்டின் 

ஒரு மூலையில் உள்ள 

அட்டைப் பெட்டியில் 

அடங்கிக் கொள்கிறது...

நான் அந்த புதிய சட்டையை 

எந்தவித தொந்தரவும் இல்லாமல் 

காதலித்து 

என் மேனியோடு 

அணைத்துக் கொள்ள வேண்டும் என்று 

அது நினைத்திருக்கக் கூடும்...

இங்கே எது எப்படியோ 

அந்த பழைய காதலியை 

மறப்பது போல தான் 

அந்த பிரிவின் வலியும்... 

அதன் பிரிவின் வலியை 

கண்ணீரோடு சுமந்து 

பயணிக்கிறேன் இங்கே நான்...

அங்கேயோ

 பலபேர் இதோ பார் 

இவனுக்கு வந்த வாழ்வு என்று 

ஏசுகிறது...

இங்கே நானும் அந்த கிழிந்த 

பழைய சட்டையும் கொண்ட காதலை 

யார் உண்மையில் 

அறியக் கூடும்???

இங்கே காதல் என்றாலே 

கருணையற்று தான் 

போக வேண்டும் என்ற விதியோ??

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 04/02/25/செவ்வாய் கிழமை.

அந்தி மாலைப் பொழுதில்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த வெறுமையோடு கூடிய பயணத்தில் ஒரு துணையாக...

அந்த வெறுமையோடு கூடிய  பயணத்தை  நான் பயணித்துக் கொண்டு  இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு  சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...