அந்த புழுதிக் காற்றில் தான்
என் சுவாசத்தின்
தீரா காதல் ஒன்று அலைந்து
திரிகிறது...
எந்நேரமும் அது இந்த பிரபஞ்சத்தின்
ஒரு மூலையை
தாக்கி விடவும் கூடும்...
அந்த தாக்குதலின் எச்சரிக்கை மட்டுமே
இங்கே முன்னறிவிப்பு செய்ய இயலும்...
அதன் தீவிரத்தை இங்கே
யார் அறியக் கூடும்?
ஒரு வேளை அதன் ஆக்ரோஷத்தை எதிர் கொள்ள இயலாமல்
இந்த பிரபஞ்சம் அழிந்து விடவும் கூடும்...
அதுவும் இங்கே யார்
அறியக் கூடும்?
ஒரு வேளை ஏதேனும் அதிருஷ்டம் இருந்து
அந்த தாக்குதலில் இருந்து
தப்பித்த எச்சம் ஒன்று
இருந்தால் அது என் காதலின்
தீவிரத்தை
எதிர் வரும் சந்ததியினருக்கு
உணர்வுப் பூர்வமாக
கடத்தி விட்டு
தான் பேரமைதி கொண்டு
இந்த பிரபஞ்சத்தில் மூழ்கி
தான் வந்த பணியை செய்து
முடித்து விட்ட பேரமைதியில்
நீங்கா துயில் கொண்டு
தன்னை
ஆசுவாசப்படுத்திக்
கொள்ளும் போது
என் சுவாசத்தின் தீரா காதலும் பேரமைதி கொண்டு
இந்த பிரபஞ்சத்தில் உயிரோட்டத்தை
மீண்டும் புதுப்பித்துக் கொண்டு
உற்சாகமாக பெரும் காதலோடு
நடைப் போட்டு
புது யுகத்தை துவக்கி
ஏதும் அறியாதது போல
புன்னகையோடு வேடிக்கை பார்த்துக் கொண்டே
அதோ அந்த காலமெனும் சாலையில் நடந்து செல்லும்...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 11/02/24/செவ்வாய் கிழமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக