ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

அந்த எண்ணற்ற பயணங்களில்...


அந்த எண்ணற்ற பயணங்கள் தான் 

எனை வேறு ஒரு உலகத்திற்கு 

அழைத்துச் சென்றது...

என்னோடு பயணிப்பவர்கள் 

எத்தனையோ கதைகளை 

என்னோடு கதைத்து என் பயணத்தை 

சுவாரஸ்யமாக்குகிறார்கள்...

நான் எத்தனையோ கதைகளை 

கேட்டு விட்டு 

இறங்கும் வழியில் அவர்கள் கதைகளை 

அந்த சாலையிலேயே விட்டு விட்டு 

சலனமின்றி பயணிப்பதை பார்த்து 

அந்த காலம் எனை இரக்கமின்றி 

பயணிப்பதாக கொஞ்சம் 

குறைப்பட்டுக் கொண்டது!

நானோ இதில் என் தவறு ஏதுமில்லை!

நான் எப்போதும் நான் தான்...

என் உலகமும் வேறு தான்...

அதுசரி அவர்கள் கதைகளுக்கு 

என்னிடம் ஏதும் தீர்வு தர சொல்லி 

இந்த பிரபஞ்சம் என்னிடம் 

உத்தரவிடவில்லையே 

என்றேன் அதுவும் சரிதான் என்று 

அந்த காலமும் மெல்லிய 

புன்னகையுடன் 

விடைப்பெற்றது நானும் தான்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 16/02/25/ஞாயிற்றுக்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மர்ம வீடு பாகம் (1)

அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...