ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2025

வலிகளையும் தாண்டி மௌனமாக நகர்கிறது வாழ்க்கை...


வலிகள் தான் பெரும்பாலான 

வாழ்க்கை பயணங்களை 

நிர்ணயிக்கின்றது!

அந்த வலிகளையும் தாண்டி 

மௌனமாக நகர்கிறது...

இங்கே வாழ்க்கை!

எதுவும் புரிந்துக் கொள்ள 

முடியாத சூழலில் சில...

எதையும் உணர முடியாத 

சூழலில் பல!

இங்கே எதுவாயினும் 

எனை தாக்காத துயரென்று 

இங்கே ஏதும் இல்லை!

வாழ்க்கை எனை மயான அமைதிக்கு 

மெல்ல மெல்ல எடுத்து 

செல்வதை மட்டும் 

உணர முடிகிறது...

இங்கே அந்த மாயையின் 

பிடியில் இருந்து 

நழுவி போக வழி தேடி அலையும்

சிறகொடிந்த பறவை நான்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:23/02/25.

அந்திமாலை நேரம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

  நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர்  கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...