ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 28 ஜூலை, 2022

இன்றைய தலையங்கம்

 இன்றைய தலையங்கம்:-

தேசத்தின் உயர்ந்த பதவியான ஜனாதிபதி பதவிக்கு திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்.. ஒரு குக்கிராமத்தில் இருந்து அரசியல் வாழ்வில் கால் பதித்து தமது வாழ்வில் பல போராட்டங்களை அனுபவித்து இன்று மிக உயர்ந்த பதவிக்கு வந்து இருக்கும் இரண்டாவது பெண் ஜனாதிபதி...

ஒருவரை பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது என்பது வேறு.. அவர் ஒரு உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கும் போது விமர்சிப்பது வேறு.. தற்போது அவர் நாட்டின் பெருமைக்குரிய பதவியான மிக உயர்ந்த பதவியான ஜனாதிபதி பதவியை அடைந்து தனக்கான பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு விட்டார்.. இப்போது ஜனாதிபதியை தரக் குறைவாக ஒரு காங்கிரஸ் தலைவர் பேசி இருப்பது மிகவும் வருத்தமான விசயம்.. லோக் சபா காங்கிரஸ் தலைவரான எம்.பி.அதிர் ரஞ்சன் சௌத்ரி அருவருக்கத்தக்க வகையில் பேசி இருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது... அவர் அரசியல் வாழ்வின் கரும் புள்ளி.. மேலும் அவரை தேர்ந்தெடுத்த மக்களுக்கு மிக பெரிய அவமானத்தை தேடி தந்து விட்டார்.. மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுப்பது எல்லாம் இவர்கள் வாய் ஜாலம் மற்றும் அருவருக்கத்தக்க பேச்சை கேட்பதற்கு தான் என்று நினைத்து விட்டார்கள் போலும்.. ஏன் இந்த அவல நிலை...நமது அரசியலமைப்பு சட்டத்தை இதை விட கேவலமாக அவமதிக்க முடியாது..இதை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வன்மையாக கண்டிக்க வேண்டிய இடத்தில் இருந்தும் கண்டிக்காமல் இருப்பது மிகவும் மோசமான விசயம்...

எங்கே பார்த்தாலும் ஜாதி மதம் இதை தாண்டி யோசிக்காமல் குறுகிய மனப்பான்மையில் இருப்பது தான் வேடிக்கை..

ஒரு பதவிக்கு தேர்ந்தெடுத்த பிறகு அவரை பற்றி விமர்சிப்பது தரம் தாழ்ந்த செயல்.. இதற்கு ஒரு முடிவுக்கு கட்ட வேண்டும்..

ஜனாதிபதி தேர்வுக்கு திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்படுவதாக உறுதியான பிறகு சொல்லிய பிறகு தான் அந்த கிராமத்திற்கு மின்சார வசதி அவசரமாக அவசரமாக செய்ததையும் இங்கே நாம் நினைவுக் கூர வேண்டும்..நமது நாட்டில் அரசியல்வாதிகள் தமது அரசியல் சித்து விளையாட்டுக்கு எவரையேனும் பகடையாக்கி விட்டு குளிர் காய்வதை நிறுத்த வேண்டும்..

இங்கே பழங்குடியினர்கள் நாட்டின் பல பகுதிகளில் மிகவும் மோசமான நிலையில் உணவுக்கு கூட வழி இல்லாமல் அடிப்படை வசதி கூட இல்லாமல் அவதிப்படுவது இந்த நாட்டில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு தெரியவில்லை போலும்.. தாம் நிறுத்தும் வேட்பாளரை அரசியல் பாகுபாடு இல்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அகங்காரம் மட்டும் தான் தெரிகிறது.. ஒவ்வொரு முறையும் குடியரசு தலைவரை நிறுத்தும் போதும்.. அரசியல் ராஜதந்திர வேலைகளை கட்சி பாகுபாடு இல்லாமல் செய்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் நமது தேசத்தின் அரசியல்வாதிகள்.. அவர் நாட்டின் முதல் குடிமகன்.. அவரின் மேல் உங்கள் காழ்ப்புணர்ச்சி மை தயவுசெய்து செய்து காட்டாதீர்கள்...அவரை அவமதிக்கும் வேலையை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்....

#தலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இரவு சிந்தனை ✨

  அதீத உள் தேடல்,  உங்களை நீங்களே நேசித்தல்,  எதுவாக இருந்தாலும்  பார்த்துக் கொள்ளலாம்  இங்கே இழப்பதற்கு  நம்மிடம் எதுவும் இல்லை என்கின்ற தி...