ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 23 ஜூலை, 2021

பிரபஞ்சம் எனும் துணை











அருவிகள் போல 

கொட்டி தீர்க்க

துடிக்கிறது

நெஞ்சத்தில் எங்கோ

ஒட்டிக் கொண்டு

வெளி வர துடிக்கும்

பல துன்பங்கள்!

வெளியே வந்து விடு

உன் சுமைகளை சுமக்க

நான் இருக்கிறேன் என்று

இந்த பிரபஞ்சம் அழைக்கிறது!

துன்பமோ வேண்டாம்

நீ நான் வெளி வருவதால்

சிதைக்கப்படுவாய் என்று

உள்ளுக்குள்ளேயே

உருண்டோடி 

வேதனைக் கொள்கிறது

உற்றத் துணையான

பிரபஞ்சத்தினை 

காயப்படுத்த வேண்டாமென

நினைத்து!









3 கருத்துகள்:

போர் நிறுத்தம்...

   இத்தனை நாள் தூரமாக நின்று  வேடிக்கை பார்த்த  அமைதி  இன்று எந்த தயக்கமும்  இல்லாமல் என் கைகளில்  வேகமாக ஓடி வந்து  பேரன்பு கொண்டு  என்னை ...