ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 26 ஜூலை, 2021

சூட்சம இரவின் பயணம்


 எல்லா இரவுகளும்

ஏதோவொரு சூட்சம பயணத்தை

தாங்கி தான் பயணிக்கிறது!

அந்த பயணத்தின்

சூட்சமம் விடைதேடும்

பயணமாக தொடர்கிறது!

இரவும் மௌனமாக

பயணிக்கிறது

அந்த சூட்சம விடையை

தேடி மிக மிக நேர்த்தியாக!

நானோ விடை கிடைக்குமா

கிடைக்காதா என்று

தவிப்பில் 

காத்திருக்கும் நேரத்தில்

இரவு தனது இருளை 

இன்னும் 

கருமையாக்கிக்கொள்கிறது!

எனது தவிப்பில் நிலையை

உணர்ந்தும் 

உணராதது போல நடித்து!

#இளையவேணிகிருஷ்ணா.












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்க்கை ஒரு சமன்பாடு தான் -சூபிஞானி கதை 🎉🦋

  வணக்கம் நேயர்களே 🎻🙏  இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...