ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 16 ஜூலை, 2021

வாழ்க்கை எனும் மாய ஆறு

வாழ்க்கை எனும்
மாய ஆறு எனை 
அடித்து துவைத்து
துவம்சம் செய்து
இழுத்து செல்கிறது!
நானோ கொஞ்சம்
ஓய்வெடுக்க நினைக்கிறேன்!
வாய் விட்டு கதறுகிறேன்
அண்டத்தின் ஆனந்தத்தை
அனுபவிக்க துடிக்கும்
இந்த ஜீவனை
விட்டு விடு என்று!
அந்த ஆறோ என் பேச்சை
அதன் வேக பிரளயத்தில்
கலங்கிய சேற்றில்
புதைத்து
மேலும் வேகமாக
இழுத்து செல்கிறது
என் ஆனந்த நிலையை
ரணமாக்கி சுவைத்து கொண்டே!
#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீள் இரவின் கொடுமை...

  நீ பிரிந்து சென்ற  ஒவ்வொரு நாளின்  இரவையும்  கடந்து செல்வது  அவ்வளவு எளிதல்ல  எனக்கு... அது நரகத்தின் வேதனையை  எனக்கு தந்து  அந்த காயத்தில...