அதோ தனியாக வானில்
என்னை ஒரு ஏக்க பார்வை
பார்த்துக் கொண்டே
இருக்கிறது
இந்த நடுநிசி
நெருங்கிய வேளையில்
அந்த நிலா...
எங்கே விட்டு விட்டு
சென்று விட்டது
இந்த விண்மீன்கள் ...
இங்கே எனக்கும் அதற்கும்
உள்ள தூரத்தில்
நாங்கள் இருவரும்
இங்கே ஒருவரையொருவர்
ஏக்கமாக பார்த்துக் கொண்டே
இரவை கழிப்பதா?
அதற்கு ஒரு பிரச்சினையும்
இல்லை ...
விடிந்தாலும் அது வானிலேயே
எந்தவித சலனமும் இல்லாமல்
வலம் வரும்...
நானோ விடிந்ததும்
எதை நோக்கி பயணிக்கிறேன்
என்பதே தெரியாமல்
ஓடிக் கொண்டே இருக்க வேண்டும்...
யார் அங்கே கொஞ்சம்
அந்த விண்மீன்களை
தேடி அழைத்து வந்து
அதன் அருகில் விட்டு விடுங்கள்
கொஞ்சம்...
நான் இங்கே நிம்மதியாக உறங்க...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:27/08/26.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக