ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 28 மே, 2026

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...


என் உயிர் சுவாசத்தின் 

தீண்டலாக 

நீ என்னோடு 

ஒருவித கதகதப்போடு

ஜீவித்து இருக்கிறாய்...


ஒரு நகரத்தில் சாலை வெளியின் 

பரபரப்புக்குகளுக்கிடையே 

நகரும் 

பட்டாம்பூச்சியாக 

என் மனமெனும் சாலையில் 

நீ பறந்து செல்கிறாய்...


உன் வருகைக்காக 

காத்திருக்கும் நேரத்தின் 

நொடிகளுக்குள் 

ஒரு தேவதையாக 

என்னோடு அரூபமாக 

பேசி சிரிக்கிறாய்...


என் வனமெங்கும் 

உன் காதலெனும் 

பூவின் வாசத்தில் 

கிறங்கடிக்கிறாய்...


காலமெனும் நதியில் 

உன்னோடு பயணித்த 

நினைவுகளை தூவி 

நான் அந்த நதியின் கரையில் 

ஒதுங்கி அந்த நினைவுகளை 

காவல் காத்து சிறை 

பிடித்திருப்பேன்...


என்றோவொரு யுகத்தில் 

நீ என் பெரும் காதலே காதலே 

என்று கண்ணீர் மல்க 

ஓடோடி வந்து 

என்னை அணைத்துக் கொண்டு 

அந்த நதியை என்னிடம் இருந்து 

விடுதலை செய்வாய் என்ற 

நம்பிக்கையோடு 

என் கண்மணியே...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:29/05/26.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...