ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 26 மே, 2026

அந்த அமிர்த கடலில் மூழ்கி களித்த நாட்கள்...


பெரும் புயலே அடித்தாலும் 

கவலைகளின் நிழலில் 

எப்போதும் 

ஒதுங்கியதாக 

எனக்கு நினைவில் இல்லை...


ஒரு கணப் பொழுதிலும் 

மகிழ்ச்சி எனும் 

உணர்வெனும் ஆற்றில் 

நனைந்த நாட்களை 

நினைக்க 

தவறியதில்லை...


நட்பெனும் கரத்தின் பிடியை 

எவர் இரும்பு கரம் கொண்டு 

தடுத்து நிறுத்தினாலும் 

உறுதியாக அந்த கரத்தை 

இறுக பற்றிக் கொண்டேனே தவிர

அதை நழுவ விட்டதில்லை...


இப்படி காலமே ஆச்சரியமாக 

அதிர்ந்து பார்க்கும் 

பல நிகழ்வுகள் 

இப்போதும் நினைவில் இருந்து 

இறங்க மறுக்கிறது...


அதெல்லாம் என் இளமையின் 

துணைக் கொண்டு 

அந்த இளம் பருவ குளத்தில் 

குதியாட்டம் போட்டு...


வாழ்வை ஒரு சிறு பகுதியும் 

விடாமல் ரசித்து ருசித்து 

மகிழ்ந்து குதியாட்டம் போட்ட 

மறக்க முடியாத 

என் வாழ்வின் அமிர்த கடலென 

பரந்து விரிந்து 

கிடந்த நாட்கள்...


மீண்டும் அந்த அமிர்த கடலில் 

மூழ்கி கிடக்கும் 

பாக்கியத்தை 

ஏங்கி தவிக்கும் 

என் நிலையை...


இப்போது 

அந்த காலம் புரிந்துக் கொண்டு 

புன்முறுவலோடு 

தலையசைத்து 

மௌனமாக கடந்து செல்கிறது 

மீண்டும் அந்த நாட்களை 

மீட்டு கொண்டு வருவேன் என்று 

உறுதிமொழி அளிக்க 

மனமில்லாமலேயே...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:27/05/26.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்வெனும் நெடும் பாதையில் நான்...

  வாழ்வெனும்  நெடும் பாதையில்  வஞ்சிக்கப்பட்ட  பலரோடும்... உண்மையான  நேசத்தை கொட்டி  எதையும்  என்னிடம் எதிர்பாராமல்  பயணிக்கும்  பலரோடும்  த...