இன்றைய தலையங்கம்:-
சமூக சீர்கேடு மற்றும் தரம் தாழ்ந்த மாநிலமாக சுய ஒழுக்கத்தில் இருந்து விலகி செல்கிறதா தமிழ் நாடு?
ஆழ்ந்த உணர்வு பெருக்குக்கு முன்னால் உங்கள் அலங்கார அரசியல் அறிக்கையோ காசு பணம் துட்டு எல்லாம் வேலை செய்யாது என்பதை விளாத்திகுளம் நிகழ்வு சுட்டிக் காட்டுகிறது...
முந்தைய அதிமுக அரசை டாஸ்மாக் விஷயத்திற்காக சரமாரியாக கேள்வி கேட்ட கனிமொழி எம்.பி தற்போது அதே விசயத்திற்காக மக்கள் எழுச்சியால் பயந்து காவலர் துணையோடு மீண்டு சென்று இருக்கிறார்...
கர்மா எப்போதும் தருணம் பார்த்து திருப்பி அடிக்கும்... கனிமொழி எம்.பி அவர்களே!
ஆளும் அரசை தங்களது சகோதரன் தானே வழி நடத்துகிறார் அதுவும் காவல் துறை அவரது கைகளில் கொண்டு...
நீங்கள் யதார்த்தமான உண்மையை சில வருடங்களுக்கு முன்பே எடுத்து சொல்லி புரிய வைத்து இருந்தால் உங்களுக்கு தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் இந்த மோசமான அருவருக்கத்தக்க நிலை மக்களிடையே அவமானப்படும் நிலை வந்து இருக்காது...
போதை கலாச்சாரம் தமிழ் நாட்டில் வாழும் அனைத்து பிரஜைகளுக்கும் ஒரு விதமான பயத்தை கொடுத்து இருக்கிறது...
யதார்த்ததை இனியாவது உணருங்கள்...
எதை எடுத்தாலும் வட இந்தியாவை உதாரணம் காட்டி பேசுவதை நிறுத்துங்கள்...
இது உங்கள் தவறை மறைக்கும் தந்திரம் என்று உணருங்கள்...
எப்படி அறிவார்ந்த சமூகத்தை தங்களது ஆட்சியில் மிகவும் கீழ்த்தரமான மாநிலமாக மாற்றி வைத்து இருக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியவில்லையா...
முதலில் நீங்கள் ஒரு பெண் பிறகு தான் நீங்கள் ஒரு எம்.பி.
சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது என்று பல வருடங்களாக முன்னாள் முதல்வர் எடப்பாடி சொல்லும் போதெல்லாம் தாங்கள் அனைவரும் கேலி கிண்டல் செய்து அதை சரி செய்ய முனையாததன் விளைவு இது...
ஆமாம் நீங்கள் உங்கள் சகோதரர் என்ன மாதிரியான அரசியல் கற்றுக் கொண்டு அரசியல் களத்தில் இருக்கிறீர்கள் என்பதை கொஞ்சம் மக்களுக்கு தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும்...
மக்களுக்கு தேவை எப்போதும் நிம்மதியான அமைதியான பாதுகாப்பான வாழ்க்கை மட்டுமே.. மற்றபடி உங்களை போன்ற ஆடம்பர வாழ்க்கையை அல்ல...
மக்களுக்காக தான் நீங்கள்..
உங்களுக்காக மக்கள் இல்லை...
#சட்டம்ஒழுங்கு
#பெண்பாதுகாப்பு
#சமூகபாதுகாப்பு.
#இன்றைய தலையங்கம்.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:14/03/26.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக