ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 21 பிப்ரவரி, 2026

ஒளி பிறந்து என் வாழ்வின் வசந்தத்தின் வாசலை திறந்து வைத்து...

 




ஒவ்வொரு கணங்களும்

வறுமையின்

கோரத் தாண்டவத்தில்

என்னை பதம் பார்க்கிறது...


சற்றும் மனம் தளராத

விக்கிரமாதித்தனை போல்

தடைகளை உடைத்து

தூள் தூளாக்கி முன்னேறி

செல்கிறேன்...


வாழ்க்கை எனும் தோட்டத்தில்

ஏதேனும் ஒரு மலர்

பூத்து அந்த பிரபஞ்சம் எங்கும்

வாசம் வீசாதா என்று

ஏங்கி தவிக்கும் நேரத்தில்

வானில் விடிவெள்ளி போல

ஒரு அற்புதமான தருணம்

என் வாழ்வில் ஒளி பாய்ச்ச

இதோ இப்போது

வந்த இந்நாளில் 

ஒளி பிறந்து என் வாழ்வில்

வசந்தத்தின் வாசலை

திறந்து வைத்து

மலர் தூவி வரவேற்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:22/02/26.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீள் இரவின் கொடுமை...

  நீ பிரிந்து சென்ற  ஒவ்வொரு நாளின்  இரவையும்  கடந்து செல்வது  அவ்வளவு எளிதல்ல  எனக்கு... அது நரகத்தின் வேதனையை  எனக்கு தந்து  அந்த காயத்தில...