என்றோ நீ என்னை
காதலித்த நாட்கள்
எல்லாம்
என் நேற்றைய
இரவின் கனவில்
வந்து வண்ணங்கள் அப்பி
அலங்கரித்து நிற்கிறது...
கனவில் எத்தனை நாழிகை
பேசினோம் என்று தெரியாது...
நீ நிஜத்தில் பேசியதை விட
கனவில் எந்த குற்றமும்
நிகழ்த்தாமல் பேசியதே
எனக்கு போதுமானதாக
இருந்தது...
ஒரு அதிசய வண்ணங்கள்
கொண்ட பட்டாம்பூச்சி
நம்மை உரசி
பறந்து சென்றதை நீ கவனித்து
அதை பிடித்து தர சொல்லி
நிர்பந்தம் செய்து
கோபித்துக் கொண்டு
திரும்பி நிற்க...
நான் அதை சகிக்காமல்
துரத்தி வெகுதூரம் சென்று
கையோடு அதை பிடித்து வர
நீ அந்த இடத்தில் இல்லாமல்
எங்கோ தொலைந்து போனாய்...
உன்னை நினைத்து
பெரும் குரலெழுப்பி
உன் பெயரை
வேகமாக உச்சரிக்க
அருகில் இருந்த
மனைவியோ
என்னை உலுக்கியதில்
நான் சுயநினைவுக்கு
வந்து திகைத்து அவளை
பார்க்கும் போதே
அவள் என் நிலையை
புரிந்துக் கொண்டு
என்னை அணைத்துக் கொண்டதில்
நான் அவள் நிலையை
உணர்ந்து
சிறிது வடித்த கண்ணீரின்
வெப்பத்தில்
நீ உணர்ந்து இருப்பாய்
என் காதலின் தகிப்பை...
ஏன் வந்தது அந்த கனவு என்று
நான் துடித்திருப்பதை
எங்கோ இருக்கும் அவள்
உணர்வாளோ என்று
நான் அறியேன் ...
எது எப்படியாயினும்
மறக்க முடியாத
இந்த கனவின் மூலம்
அவள் வந்து என்னை
கொன்று தின்று விட்டு
என் எச்சத்தை
என் வாழ்க்கை துணைக்கு
பரிசாக்கிய போதும்
என் வாழ்க்கை துணைவி
அதை பிறர் தின்று போட்ட
எச்சம் என்று எண்ணாமல்
அமிழ்தென
பெரும் மரியாதையோடு
பாதுக்காப்பதை பார்த்து
நான் கண்ணீரோடு
என்றும் இல்லாத
பேரன்பு கொண்டு அவளை
தழுவு நிற்கிறேன்...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:24/02/26.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக