ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 1 ஆகஸ்ட், 2024

அந்த அங்காடி தெருவில் நான்...


அந்த அங்காடித் தெருவில் சம்பந்தமே 

இல்லாமல் நுழைந்து விட்டேன்...

அங்கே பல பேரின் 

உரையாடலை கேட்டு ஆச்சரியம் அடைந்தேன்...

இது இதெல்லாம் இல்லை என்றால் எனது வாழ்வே சூனியம் ஆகி விடும் என்ற போக்கில் பேச்சு போனது 

அங்கே பல பேரிடம்...

அதை கேட்டு விட்டு 

நான் சத்தமாக சிரிப்பதை பார்த்து விட்டு 

அங்கே பல பேரின் முகங்கள் 

எனை திரும்பி பார்த்த விதம் 

ஏதோ வேற்று கிரக வாசி வந்து விட்டதை போல...

எல்லோரும் எனை சூழ்ந்துகொண்டு 

கேள்வி கணைகளால் 

என்னை துளைத்தெடுக்கும் போது 

கொஞ்சம் அமைதியாக இருக்கிறீர்களா என்றேன் 

ஒரு பெரும் கோபத்தோடு...

இங்கே எனக்கான தேவை

என்று ஒன்றேயொன்று 

அதுவும் எனக்கு பிறந்ததிலிருந்து கிடைத்து விடுகிறது...

அதுவும் இலவசமாக...

இந்த பிரபஞ்சத்தில் இருந்து 

விலகி விடும் வரை 

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பயணிக்கும்...

எனது குறுகிய தேவையை நான் பட்டியலிடாமலேயே இயற்கை எனக்கு பேரன்போடு கொடுத்து உபசரித்து விடுகிறது...

குறிப்பாக எந்த ஜிஎஸ்டி வரியும் இல்லாமல் வாழ்வது எப்படி என்று எனக்கு இயற்கை கற்றுக் கொடுத்து விட்டது ...

இனி எல்லாம் பேரின்பமே 

என்ன எனை மன்னித்து விடு தேசமே என்று மிகவும் எளிதாக சொல்லி விட்டு 

அந்த அங்காடி தெருவில் இருந்து லாவகமாக வெளியேறுவதை பார்த்து 

எனை சூழ்ந்துக் கொண்ட கூட்டம் தன்னையும் அறியாமல் எனக்கு வழி விட்டு ஸ்தம்பித்து நிற்கிறது...

#அந்த #அங்காடித்தெருவில்நான்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:01/08/24/வியாழக்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...