ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 21 ஜூலை, 2026

காலத்தால் வலுக்கட்டாயமாக இழுத்து செல்லப்படும் மனிதர்கள்...


காலம் எந்தவித இரக்கமும் 

இல்லாமல் பல மனிதர்களை 

வலுக்கட்டாயமாக இழுத்து 

செல்கிறது...

அவர்கள் தன் சுயத்தை 

தொலைத்து  

எல்லா உணர்வுகளையும் 

இந்த பிரபஞ்சத்தின் ஆழத்தில் 

புதைத்து விட்டு 

அதனோடு பயணிக்கிறார்கள்...

நானோ அந்த காட்சியை 

இந்த பிரபஞ்சத்தின் 

ஒரு ஓரத்தில் 

அமர்ந்து 

தேநீரை மிடறு மிடறாக 

பருகிய படியே 

ரசித்து வேடிக்கை பார்க்கிறேன்... 

பிரபஞ்சமோ நின்று நிதானமாக 

என்னை சத்தம் இல்லாமல்

வேடிக்கை பார்த்து ரசிக்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:22/07/26.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில்  வாழ்ந்து கொண்டு  இருப்பவர் சில நாட்களில்  உற்சாகம் இழந்து  அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய  அந்த வீட்டில்  உள...