ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 26 ஜூலை, 2026

அமிர்த கடலென நீ எனக்கு...

 



எத்தனை துயரங்களையும் 

அசராமல்

அடித்து நொறுக்கி 

அந்த துயரங்களை

அயர்வடைய செய்து 


என் மோசமான 

சூழலை எல்லாம் 

கொஞ்சமும் 

அலுத்துக் கொள்ளாமல் 

என்னை தன் மிருதுவான 

அரவணைப்பால் 

அணைத்துக் கொண்டு 

என் வாழ்வில் 

நிகழும் 

நஞ்சு துளிகள் எனும் 

நிகழ்வுகளை எல்லாம் 

அமிர்த கடலென 

மாற்றுவதில் 


பெரும் மகிழ்வோடு 

ஈடுபடும் நீ 

எனக்கானவனாக 

இரேழு ஜென்மங்களிலும் 

சமுத்திரத்தை தேடி 

ஓடோடி வந்து சங்கமிக்கும் 

நதியென 

தொடர்வாயா 

என் ஆருயிரே...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:27/07/26.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில்  வாழ்ந்து கொண்டு  இருப்பவர் சில நாட்களில்  உற்சாகம் இழந்து  அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய  அந்த வீட்டில்  உள...