ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 20 அக்டோபர், 2025

இன்றைய தலையங்கம்

 


#இன்றையதலையங்கம்:-

அரசாங்கம் சட்டம் ஒழுங்கு மிகவும் நன்றாக உள்ளது என்று சொன்னால் அதை நேரில் அனுபவித்து வரும் பொதுமக்கள் என்ன நிலையில் உள்ளது என்று அறிவார்கள்... தங்களது கண்களுக்கு முன்னே பலவகையான போதை வஸ்துவை பயன்படுத்தி தாய் தந்தையரை கொடுமைப்படுத்தி மற்றும் பொது இடத்தில் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பேசி மோசமான சமூகத்தின் அடையாளமாக தற்போது இளைஞர் சமூகம் மாறிக் கொண்டே வருகிறது என்பதை இங்கே இந்த பதிவை வாசிக்கும் எவரும் மறுக்க முடியாது...

இளைஞர்கள் முன்னேற்றத்திற்காக நிறைய திட்டங்களை வகுத்து வருகிறோம் என்று மேடை தோறும் பேசி வரும் அரசாங்கம் இங்கே இளைஞர்கள் போதை வஸ்துவால் சீரழிகிறார்கள் என்று சொன்னால் மறுக்கிறார்கள் அல்லது அவர்கள் நலனில் அவர்கள் குடும்ப நலனில் அக்கறை இன்றி ஏதேதோ பேசி நழுவி விடுகிறார்கள்...கிராமப்புறம் வரை போதை வஸ்து பெருகி விட்டது.. நள்ளிரவு வரை மிகவும் அதிகமாக அருவருக்கத்தக்க வகையில் பேசி முதியவர்கள் நோய் வாய்ப்பட்டவர்கள் மற்றும் எவரையும் உறங்க விடுவதில்லை...

இது நிச்சயமாக தேர்தல் முடிவுகளில் தெரியும்...

ஏனெனில் ஒரு பள்ளியில் குடித்து விட்டு தகாத முறையில் ஆசிரியர்கள் வருவதும் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதற்காக அவர்களை பணி இடை நீக்கம் செய்வதும் தொடர் கதையாகிறது... ஏன் பணிஇடை நீக்கம் செய்ய வேண்டும்... அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து சிறைவாசம் அனுபவிக்க வைக்க அப்படி என்ன தயக்கம் இந்த அரசாங்கத்திற்கு என்று தெரியவில்லை...

ஆனால் ஒரு விஷயத்தை புரிந்துக் கொள்ள வேண்டும் எல்லா அரசியல் கட்சிகளும்...

மக்களுக்காக தான் ஒழுங்கான அமைதியான சமூகத்தை உருவாக்க தான் அரசியல் கட்சிகளே தவிர ஒரு இனத்தை அழிப்பதற்காக அல்ல... ஏனெனில் எவ்வளவு மதிப்பு மரியாதை கொண்ட தமிழ் நாட்டின் பெருமை மிகவும் மோசமாக போய்க் கொண்டு இருக்கிறது...

இனியேனும் அரசியல் கட்சிகள் திருந்த வேண்டும்...

ஏனெனில் ஓட்டு அரசியலையும் தாண்டி மக்கள் தற்போது தமது வீட்டு வாசல் வரை சமூக சீர்கேடுகளால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்...

ஒரு நூலகத்தின் முன்பு போதை வஸ்து மற்றும் சாராய பாட்டில் இப்படி கிடப்பதை எந்த அறிவார்ந்த சமூகமும் ஏற்றுக் கொள்ளாது...

நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்பது தான் தமிழ் நாட்டில் உள்ள மக்களின் வேத வாக்கு...

கொஞ்சம் சமூக அக்கறை கொண்டு அரசியல் கட்சிகளை நடத்தி வாருங்கள்...

இல்லை என்றால் அதற்கான விளைவுகளை மக்கள் மிகவும் அற்புதமாக கொடுத்து விடுவார்கள்...

இங்கே கட்சி சார்பின்றி நடுநிலை என்று ஒன்று இருக்கிறது... சமூக அக்கறை என்று ஒன்று இருக்கிறது...

தமது தீவிரமான விசுவாசி எங்கே போய் விட போகிறார்கள் என்று கட்சி தொண்டர்களை நினைக்காதீர்கள்.. ஏனெனில் அவர்கள் குடும்பமும் இதே தமிழ் சமூகத்தில் பல அருவருக்கத்தக்க விசயங்களை தமது வீட்டு இளைஞர்கள் மூலம் அனுபவித்து வருகிறது...

இனியேனும் விழித்துக் கொள்ளுங்கள்!

அது நல்ல சமூகத்தின் பாதையை உருவாக்கட்டும்...

தீபாவளி சரக்கு விற்பனை காசு எவ்வளவு தேறியது எவ்வளவு கல்லா கட்டினோம் என்று பார்ப்பதற்கு முன்னால் ஒரு அரசாங்கம் தம்மை சுய பரிசோதனை செய்து கொள்ளட்டும்... இல்லை என்றால் அவர்கள் மனசாட்சி அவர்களுக்கு தண்டனை கொடுக்கட்டும்...

உப்பு தின்பவன் தண்ணீர் குடிக்காமல் இருக்க முடியாது.. இது இயற்கையின் நியதி.. 🍂🍁👣.

#இன்றையதலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 20/10/25.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை...

அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட  முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...