ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 12 அக்டோபர், 2025

என்னை பாதித்த ஆளுமையில் இவரும் ஒருவர்...

 


ஜூபின் ❤️ என்னை பாதித்த ஆளுமையில் இவரும் ஒருவர்... எவ்வளவு எளிமையான மனிதராக சமூகத்தில் வலம் வந்து இருக்கிறார் என்று அவரது காணொளியை பார்க்கும் போது வியந்தேன்... ஒரு இறப்பில் கிட்டத்தட்ட பதினைந்து லட்சம் பேர் கண்ணீர் மல்க கலந்துக் கொண்டு சாலை எங்கும் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்... இவரது எளிமை மற்றும் தர்மசிந்தனை தான் காரணம்... இன்னும் இவரது நினைவுகள் அகலவில்லை... உண்மையில் எனக்கு ஹிந்தி தெரியாது... ஆனால் ya Ali பாடலை இவருக்காகவே நான் ஆங்கில மொழியில் வைத்து பாடினேன்...

நிச்சயமாக இவரது இறப்பின் மௌனம் கலைய வேண்டும் என்பதே எனது ஆத்மார்த்தமான பிரார்த்தனை... கண்ணீரோடு விடை கொடுத்த போதும் நீங்கா நினைவுகளாக எப்போதும் நெஞ்சில் ஜூபின் ❤️.

#இளையவேணிகிருஷ்ணா.

2 கருத்துகள்:

அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை...

அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட  முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...