ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 19 அக்டோபர், 2025

நீயும் நானும் சேர்ந்து பருகிய தேநீரின் வாசம்...

#தேநீர் 


நீயும் நானும் சேர்ந்து பருகிய 

 வாசமும் சுவையும் இன்னும் 

அந்த தேநீர் விடுதியில் 

நமது ஞாபகமாக ஒட்டிக் கொண்டு 

இருக்கிறது ...

வெறும் அழியாத கறையாக...

நான் அதை வேடிக்கை பார்க்கிறேன் 

என்னை மறந்து!

சார் மன்னிக்கவும் அந்த கறை

நாங்கள் எவ்வளவு முயன்றும் 

அகலவில்லை என்று பணிவாக சொல்லி 

தேநீர் கோப்பையை

அந்த கறையை விட்டு தள்ளி

வைக்கிறார் அந்த விடுதி மனிதர்

நானோ முகத்தை திருப்பி சத்தம் இல்லாமல் அழுகிறேன்...

அந்த தேநீர் கறையை நினைத்து..

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 10 /10/25

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை...

அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட  முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...