#இன்றைய #நிகழ்கால #கவிதை:-
வடகிழக்கு பருவ மழையை
எதிர் கொள்ள
அரசு தயார் என்று
மாலையில் அறிக்கை வருகிறது
அரசிடமிருந்து...
இந்த அறிக்கையை பார்த்து விட்டு
மழை அதனாலென்ன...
நீங்கள் என்னை வேடிக்கை
பார்த்துக் கொண்டே இருக்கும் போது
ஒழுங்காக கழிவு நீர் மேலாண்மை
இல்லாமல் சாலையில் பெருகி
நோய் எனும் அரக்கனை பரப்பி
காவு வாங்க காத்திருக்கிறார்
கால தர்மன் என்கிறது நையாண்டியாக...
இங்கே வீடுகளில் நீர் சேமிப்பு
தொட்டிகளில் எல்லாம் தமது கைகளை
ஏதோ உள்ளே
ஆராய்ச்சி செய்வது போல
போஸ் கொடுத்து உங்களை(அரசை) ஏமாற்றி
ஊதியம் வாங்கி செல்கிறார்கள்...
வழக்கம் போல அரசு இத்தனை இடத்தில் நாங்கள் தொடர் ஆய்வு செய்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறோம் என்று மீடியாவிற்கு பேட்டி கொடுத்து தனது கடமையை முடித்துக் கொண்டு தேர்தல் வேலைகளுக்கு தயார் ஆகிறது ஆளும் அரசாங்கம்...
எதிர் கட்சிகள் அங்கே மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை என்று கூப்பாடு போட்டு இத்தனை பேர் இறந்திருக்கிறார்கள்
இது என்ன அரசா காவு வாங்கும்
அரக்கரா என்று கேள்வி கணைகளை
தொடுத்து விட்டு முகத்தில்
அரசாங்கத்திற்கு ஒரு குட்டு வைத்த
களிப்பில் தனது தேர்தல் பேரத்தை கூட்டணி கட்சிகளிடம் தொடங்கி விடுகிறது...
இந்த களேபரத்தில் தமது குடும்பத்தில்
ஒருத்தர் இறந்ததை அன்றே மறந்து
அரசு கொடுக்கும்
நிவாரண தொகையை
வாங்கிக் கொண்டு
தத்தமது வேலைகளில்
மூழ்கி போகிறார்கள் பொது ஜனங்கள்...
இதென்ன அநியாயம் என்று
அங்கே ஊழி தாண்டவத்திற்கு
கொஞ்சம் கொஞ்சமாக தயாராகிறது
இந்த பிரபஞ்சம்...
#நிகழ்காலகவிதை.
#வடகிழக்குபருவமழையும்
#இந்த #ஜனநாயகமும்
#பொதுஜனமும்.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:19/10/25.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக