எனது காத்திருத்தலின்
வலியின் தகிப்பை
இங்கே நீ அறிய
முடியாது போனதால் தான்
நான் ஏதேதோ சித்தம்
கலங்கியதை போல
செய்கிறேன்...
அன்றொரு நாள் மழை நாளில்
நீயும் நானும் சேர்ந்து பருகிய
தேநீரின் மிடரின் சுவையை
ஒரு அற்புதமான இசையை மீட்டெடுப்பது போல
நான் மீட்டி எனக்கான ஆறுதலை
தேடிக் கொள்கிறேன்...
இங்கே காதலின் தீண்டலின் சுவையை நீதான் உணர்த்தினாய்...
நீயே அதை வலுக்கட்டாயமாக என்னிடம் இருந்து பிடுங்கி
அந்த கொழுந்து விட்டு எரியும்
தீயில் எறிந்து விட்டு எதுவும் நடவாதது போல செல்கிறாய்...
இத்தனையும் நடந்த பிறகும்
நீயும் நானும் கோர்ப்போம் என்று
நம்பி உன் வரவை ஆவலோடு
எதிர்பார்த்து காத்திருக்கிறோம்
இந்த பேதைக்கு யார் ஆறுதல் என்று
எவரேனும் கேட்டால் அதுவும் நீயே என்று கொஞ்சமும் யோசிக்காமல்
சொல்லி விடும்
என் ஆழ்ந்த பெரும் காதலின்
உயிர் தீண்டலை புரிந்துக் கொண்டு
என் கரம் கோர்க்க வருவாயா என்று
இங்கே தனித்து நிற்கிறேன்
அந்த வாழ்வெனும் நெடுஞ்சாலையில்...
நீ வரும் நாளில் நான்
சித்தம் தெளிவேன் என்று
காத்திருக்கிறேன்
அதோ அங்கே பெய்யும்
பெரும் மழையையும் பொருட்படுத்தாமல்
நெடுங்காலமாக...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:22/10/25.

அருமை அருமை மகளே
பதிலளிநீக்குதங்களது மேலான கருத்துக்களை பதிவு செய்து ஊக்கம் கொடுத்ததற்கு நன்றிகள் அம்மா 🙏🙏🙏
பதிலளிநீக்கு